• May 09 2025

மனோஜுக்கு ஹெல்ப் பண்ணும் மீனா..! முத்துவைக் காலி பண்ண மாஸ்டர் பிளான் போடும் ரோகிணி..!!

subiththira / 7 hours ago

Advertisement

Listen News!

சிறகடிக்க ஆசை சீரியலில் இன்று, விஜயா மனோஜைப் பாத்து அந்த திருடன் கிடைச்சுட்டான் என்றால் உங்க கையுக்கு பணம் வருமா இல்லையா என்று கேக்கிறார். அதைக் கேட்ட மனோஜ் எனக்கும் டவுட்டாத் தான் இருக்கு ஒருவேளை ரோகிணி சொன்ன மாதிரி பொலிஸிட்ட போகாமல் இருந்திருக்கலாம் என்று சொல்லுறார். அதனை அடுத்து அண்ணாமலை முத்து பண்ணது தான் சரி என்கிறார்.

பின் மனோஜ், அப்பா நீங்க சொல்லுறது சரி ஆனா இவன் தன்ர பொண்டாட்டி பணம் காணாமல் போனப்ப பொலிஸிட்ட போனவனோ இல்லத் தானே என்று அண்ணாமலையைப் பாத்துக் கேக்கிறார். விஜயாவும் மனோஜ் கேக்கிறது சரி தான் என்று சொல்லுறார். அதைக் கேட்ட முத்து அந்த 2 லச்சத்திற்காக பொலிஸிட்ட போய் இருந்தால் அந்த சிந்தாமணி பணத்த ஈஸியா மறைச்சிருப்பா என்று சொல்லுறார்.


அதனைத் தொடர்ந்து மீனா விஜயாவப் பாத்து மனோஜ் ஏமாந்த பணத்திற்காக நாங்க கஷ்டப்பட்டு போராடி இருக்கிறோம் என்று சொல்லுறார். மேலும் பணம் கிடைக்க கூடாது என்று நினைச்சிருந்தா நாங்க ஏன் இப்படி எல்லாம் பண்ணப் போறோம் என்று விஜயாவிடம் கேக்கிறார். இதைத் தொடர்ந்து முத்து அந்தப் பணம் அப்பாக்கு கிடைக்க வேண்டியது அது கிடைச்ச அப்பாக்குத் தான் கொடுக்க வேணும் என்று மனோஜைப் பாத்துச் சொல்லுறார்.

அதனை அடுத்து ரோகிணிக்கு PA போன் எடுத்து எனக்கு கொஞ்சப் பணம் தேவைப்படுது என்று சொல்லுறார். பின் பணத்த ரெடி பண்ணிடு இல்ல என்றால் உனக்கு ஏற்கனவே கல்யாணம் பண்ணி குழந்தை இருக்கு என்ற ரகசியத்த உன்ர வீட்ட சொல்லிடுவேன் என்று மிரட்டுறார். இதைத் தொடர்ந்து ரோகிணி சிற்றிக்கு போன் எடுத்து நான் முத்துவின்ர கார் சாவி எடுத்துத் தாறேன் என்ன இந்த பிரச்சனையில இருந்து காப்பாத்து என்கிறார். இதுதான் இன்றைய எபிசொட்.

Advertisement

Advertisement