• Dec 01 2022

``ராபர்ட் பொண்ணுக்கே 20 வயசு; அவன் காதலிக்கு 22 வயசா?" - பல உண்மைகளை உடைத்த ராபர்ட் மாஸ்டரின் பெற்றோர்

Listen News!
Aishu / 6 days ago
image
Listen News!

பிக்பாஸ் சீசன் 6 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்த சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு இருப்பவர் தான்  நடன இயக்குநர் ராபர்ட்.இவ்வாறுஇருக்கையில் இவரின் பெற்றோர் பிரத்தியோக ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றை கொடுத்துள்ளார்கள்.அதில் ராபர்டை பற்றி நிறைய விசயங்களை பகிர்ந்துள்ளார்.

` என் பையனுக்கு உப்புமாவே பிடிக்காது. இங்க அவன் சாப்பிட்டதேயில்ல. ஆனா, பிக்பாஸ் வீட்ல அதை சாப்பிட்டு நிச்சயம் வெற்றி பெறணும்னு வலுக்கட்டாயமா இருக்கான்னா அதுவே எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு!' என்றவாறு பேசத் தொடங்கினார் ராபர்ட் மாஸ்டரின் அம்மா ஓமனா. ``ராபர்ட் பயங்கரமான வாலு. பிக் பாஸ் வீட்ல அவன் இன்னமும் அவனுடைய சேட்டையை பண்ண ஆரம்பிக்கல. வீட்ல எப்ப பார்த்தாலும் பயங்கர கலாட்டா பண்ணிட்டே இருப்பான். அத்தோடு அவனுடைய செட் அங்க யாருமில்லைங்கிறதனால அமைதியா இருக்கான்னு நினைக்கிறேன்!'' என்றதும் ராபர்ட்டின் தந்தை நடன இயக்குநர் மற்றும் சண்டை பயிற்சியாளர் ஆண்டனி தொடர்ந்தார்.

``நான் இத்தனை படங்கள் கோரியோகிராப் பண்ணியிருக்கேன்னு சொல்றதை விட என் பையன் ராபர்ட்னு சொல்றதைத்தான் நான் பெருமையா நினைக்கிறேன்.அத்தோடு  பிக்பாஸ் வீட்ல யாரும் ராபர்ட்டை இன்னும் குறை சொல்லலை. மேலும் அவர் சீனியர் என்பதால் ஒருவித மரியாதையோட எல்லாரும் அவரைப் பார்க்கிறாங்க. என்னைக்கு அவரைக் குறை சொல்லி மோதுறாங்களோ அன்னைக்கு வெடிப்பான். ராபர்ட்கிட்ட நிறைய பொறுமை இருக்கு. ஆனா, அவங்க அவர்கிட்ட தப்பா ஏதாவது வார்த்தை விட்டா அவன் அவங்களை விடவே மாட்டான். அவனுடைய கோபம் வருகிற வாரங்களில் வெடிக்கலாம்னு நினைக்கிறேன்" என்றவரிடம் ரச்சிதா - ராபர்ட் காதல்னு ஒரு டாக் வருதே எனக் கேட்டோம்.


``அதெல்லாம் சும்மாப்பா. அவர் எல்லார்கிட்டேயும் அன்பா பழகுவார். மேலும் அதை தவறா எடுத்துக்கிறாங்கன்னு நினைக்கிறேன். அவருடைய இயல்பான குணமே கலாட்டா பண்றதும், கலகலன்னு பேசுறதும் தான்... அவரைப் பற்றி தெரியாதவங்க இதை தப்பாகூட எடுத்துக்கலாம். ஆனா, எங்களைப் பொறுத்தவரைக்கும் காதல் எல்லாம் இருக்க வாய்ப்பே இல்லை" என்றதும் ஓமனா தொடர்ந்து கூறினார்.

``அவனுக்கு பர்சனலா நிறைய பிரச்னை இருக்கு. மேலும் இதுல இதையும் ஒரு இதுவா எடுத்துக்க மாட்டான்னு நாங்க நினைக்கிறோம்.அத்தோடு என் பையன் இறுதி வரைக்கும் போகணும்னு நான் ஆசைப்படுறேன்.. அவனோட இறுதிப் பட்டியலில் விக்ரமன் போக வாய்ப்பிருக்குன்னு நினைக்கிறேன். நான்-வெஜ் இல்லாம ராபர்ட் சாப்பிடவே மாட்டான். இன்னைக்கு அதெல்லாத்தையும் விட்டுக் கொடுத்துட்டு அவனுடைய குணத்தையே மாத்திக்கிட்டு இவ்வளவு பொறுமையா இருக்கான்னு எங்களுக்கே சந்தோஷமாகவும், வியப்பாகவும் இருக்கு" என்றதும் ஆண்டனி  கூறியிருந்தார்.

ஒரு படத்துக்கு பார்ட்னரா இணைந்து ராபர்ட் புரொடியூஸ் பண்ணினார். அந்தப் படம் அப்படி இப்படின்னு சொல்லி யாரோ அந்தப் படத்தை சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. அதோட பெயர் சொல்ல விரும்பல. அடுத்ததா, அராத்துன்னு ஒரு படம் பண்றார். மேலும் அதுல இவரும், இன்னொருத்தரும் இணைந்து தான் புரொடியூஸ் பண்ணினாங்க. அந்தப் படம் மொத்தமா முடிஞ்சு போஸ்ட் புரொடக்‌ஷன் ஒர்க் போயிட்டு இருக்கு.. கடைசி நேரத்தில் பார்ட்னராக இருந்தவர் என்னை படத்துல இருந்து கழட்டி விட்டுடுங்க.. நான் கொடுத்த பணத்தை திரும்பி கொடுங்க.. இல்லைன்னா நான் செத்துடுவேன்னு சொல்லியிருக்கார். மேலும் அவர் முப்பது லட்சம் வரைக்கும் கொடுத்திருக்கார் மீதிப்பணம் ராபர்ட் போட்டிருக்கார். ராபர்ட் நியாயமா நானும் பார்ட்னர் தானே நீங்களே படத்தை வித்துட்டு பணம் வாங்கிக்கோங்கன்னு நியாயமா சொல்லியிருந்திருக்கணும்.. அவர் என்கிட்ட அதைப் பற்றி எதுவுமே சொல்லலை. மனிதாபிமானத்திலும், அவருடைய நண்பர்கள் பேச்சைக் கேட்டும் செத்துட்டாருன்னா பிரச்னை வந்திடப் போகுதுன்னு பணம் தரேன்னு சொல்லி கையெழுத்தும் போட்டுக் கொடுத்திருக்கார். மேலும் அந்தப் படத்தோட ஹீரோ, புரொடியூசர்னு எல்லாமே ராபர்ட் தான். அந்தக் கடனை அடைக்கிறதுக்காகத்தான் முக்கியமா பிக்பாஸூக்கு ராபர்ட் போனார்" என்றவரைத் தொடர்ந்து ஓமனா கூறினார்.


``அவன் சம்பாதிச்சதெல்லாம் எங்கெங்கோ போச்சு. எல்லாரும் அவன் பணத்தை சாப்பிட்டுட்டு போயிட்டாங்க. அவனை ரொம்ப செல்லப் பிள்ளையா வளர்த்துட்டோம். அதனால தான் அவனுக்கு இந்த நிலைமை! அவனுக்குத் தெரியாத வேலையே இல்லை. அத்தோடு இன்னைக்கு பிக்பாஸிற்கு போய் பப்ளிசிட்டி தேட வேண்டிய நிலைமையும் வந்திருக்காது. அத்தோடு நான் படிக்கலைங்கிறதனால அவன் ஸ்கூலுக்கு போன சமயம் டீச்சர் அடிச்சிட்டாங்கன்னு அழுதுட்டு வந்தான். அப்ப படிப்போட அருமை தெரியாம அவனை ஸ்கூலுக்கு அனுப்பாம விட்டுட்டேன். இவரும் அவனுக்கு சினிமா இருக்கேன்னு சொல்லி படிக்க அனுப்ப சொல்லாம விட்டுட்டார். படிக்காததும் அவன் இந்த நிலையில் இருக்க ஒரு காரணம் ஆகிடுச்சு.... என்றதும் 22 வயசு பெண்ணை அவர் காதலிக்கிறதா சொன்னாரே எனக் கேட்டோம்.

மேலும் அவர் சொன்னதும் எங்களுக்கே ஷாக் ஆகத்தான் இருந்தது. எங்களுக்கே யாருன்னு தெரியல. அதுவும் 22 வயசு பொண்ணுன்னு சொல்றார். அவர் பொண்ணுக்கே 20 வயசிருக்கும். அவருக்கு ஒரே பொண்ணுதான். கல்யாணமாகி அந்தப் பொண்ணுக்கு இரண்டு வயசு இருக்கும்போதே ரெண்டு பேரும் பிரிஞ்சுட்டாங்க. மேலும் இப்ப அவங்க வேற ஒரு வாழ்க்கை நல்லா வாழ்ந்துட்டு இருக்காங்க அதனால தான் அவங்க பெயரை குறிப்பிட்டு சொல்லல. நாங்க இன்னைக்கு வரைக்கும் அந்தப் பொண்ணை பார்க்கலை. செத்துப் போன பிறகு என் பொண்ணு என் தலை பக்கத்துல நின்னா போதும்னு சொல்றான். செத்த பிறகு வந்து எதுக்கு? அவன் மனசுக்குள்ள இவ்வளவு பீலிங் இருக்குன்னு அன்னைக்குத்தான் தெரிஞ்சது எனக் கலங்கியவரை நிறுத்தி ஆண்டனி தொடர்ந்தார்.


என்கிட்ட நிறைய தடவை இதை சொல்லி பீல் பண்ணியிருக்கான். அத்தோடு ஒருமுறை இவன் பெட்ரோல் பங்க்ல இருந்தப்ப அவனுடைய முதல் மனைவி அந்தக் குழந்தையோட வந்திருக்கு. பார்மலா பேசிட்டு அங்கிளுக்கு பாய் சொல்லுன்னு என் குழந்தைகிட்டேயே சொல்லிட்டு போனாங்கப்பா அப்ப மனசு ரொம்ப உடைஞ்சிடுச்சுப்பான்னு என்கிட்ட அழுதான் என்றவர் அவரை அறியாமல் மகனை நினைத்து அழுதார். நிச்சயம் என் பையன் வெற்றியோட வருவான்!' என்று கூறினார்.