• May 04 2024

கமலின் 'விக்ரம்' படத்தை தவறாக எடைபோட்ட ஆர்.ஜே.பாலாஜி.. ஓஹோ...இது தான் சம்பவமா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் இளசுகளின் மனதை கவர்ந்த ஒரு நாயகனாக ஆர்.ஜே.பாலாஜி திகழ்ந்து வருகிறார். இவருக்கு கிரிக்கெட் கம்மென்ட்ரிக்கு இருக்கும் ரசிகர்களை விட அதிகமாகவே இவரின் நடிப்பிற்கு ரசிகர்கள் இருக்கின்றனர். “எல்.கே.ஜி”, “மூக்குத்தி அம்மன்”, “வீட்ல விசேஷம்”  போன்ற திரைப்படங்களில் இவர் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார். 

இதையடுத்து கடந்த வாரம் ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் வெளிவந்த “ரன் பேபி ரன்” என்ற திரைப்படம் கூட பெரும்  வரவேற்பை பெற்றிருந்தது. இவரின்  “வீட்ல விசேஷம்” திரைப்படம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் தேதி வெளியானது. அதாவது கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “விக்ரம்” திரைப்படம் வெளியான இரண்டு வாரங்கள் கழித்து வெளிவந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட ஆர்.ஜே.பாலாஜி, “விக்ரம்” திரைப்படத்தை தவறாக எடைபோட்டேன் என்பதை பற்றி குறித்து பேசியுள்ளார். அதாவது “விக்ரம் திரைப்படம் வெளிவந்து இரண்டு வாரங்கள் கழித்துத்தான் வீட்ல விசேஷம் திரைப்படம் வெளிவந்தது. இரண்டு வாரங்களில் மக்கள் அடுத்த படத்தை கொண்டாடி பேச தொடங்கிவிடுவார்கள் என நினைத்தோம். ஆனால் விக்ரம் திரைப்படம் தொடர்ந்து ஐந்து வாரங்கள் கொண்டாடப்பட்டது. எனினும் வீட்ல விசேஷம் திரைப்படம் கடவுள் புண்ணியத்தில் சாகவில்லை” எனவும் கூறியிருந்தார்.

மேலும் பேசிய அவர் “இப்போதெல்லாம் ஒரு திரைப்படம் மக்களுக்கு பிடித்துவிட்டால் 5 வாரங்கள் அந்த படத்தை கொண்டாடித் தீர்த்துவிடுகிறார்கள். லவ் டூடே, பொன்னியின் செல்வன், விக்ரம் ஆகிய திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம்” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement