• May 05 2026

தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகும் ரிக்ஷிதா! குவியும் வாழ்த்துக்கள்

Aathira / 2 years ago

Advertisement

Listen News!

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி, அண்மையில் நிறைவடைந்த பிரபலமான ரியாலிட்டி ஷோ தான் சரிகமபா லிட்டில் சாம்ஸ் சீசன் 3.

இதில் பங்குபற்றிய போட்டியாளர்களுள், தனது மெல்லிய குரலில் நடுவர்கள் அனைவரையும் கவர்ந்த பெண் போட்டியாளர் தான் ரிக்ஷிதா.


இவர் தான் சரிகமபா லிட்டில் சாம்ஸ் பைனலுக்கு சென்ற முதல் போட்டியாளர். எனினும், இறுதியில் இவருக்கு நான்காவது இடம் தான் கிடைத்தது.

இந்த நிலையில், தமிழ் சினிமாவில் பின்னணிப் பாடகியாக அறிமுகமாகவுள்ளார் ரிக்ஷிதா.


அதன்படி, இயக்குநர் வெற்றிமகாலிங்கம் இயக்கத்தில் வெளிவரவுள்ள "சூட்கேஸ்" திரைப்படத்தில், ரகு அவர்களின் இசையில் பாடலாசிரியர் அஸ்மின் வரிகளில் பின்னணிப்பாடகர் ஸ்ரீநிவாஸ் அவர்களோடு இணைந்து அழகான காதல் பாடலொன்றை பாடியுள்ளார்.

இந்த தகவலை அறிந்த பலரும் தற்போது ரிக்ஷிதாவுக்கு வாழ்த்து சொல்லி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement