• Mar 26 2026

விமர்சனங்கள் எல்லாம் தூசு! வசூல் மழையில் 'துரந்தர் 2'.. உலகளாவிய வசூல் எவ்வளவு தெரியுமா.?

shali / 2 days ago

Advertisement

Listen News!

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகரான ரன்வீர் சிங் நடிப்பில் மிகப்பெரிய பொருட்செலவில் உருவாகி வெளியாகியுள்ள துரந்தர் 2 திரைப்படம் தற்போது பாக்ஸ் ஆபிஸில் வசூல் மழையை பொழிந்து வருகிறது. இந்த படத்தை இயக்குநர் ஆதித்யா தார் இயக்கியுள்ள நிலையில்,சஞ்சய் தத், அர்ஜுன் ராம்பால், மாதவன் மற்றும் சாரா அர்ஜுன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான இந்த படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்தாலும், அது வசூலில் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் திரையரங்குகளில் பெருமளவில் திரண்டு படத்தை கொண்டாடி வருவதால், படம் தொடர் வெற்றிப் பாதையில் பயணித்து வருகிறது. அதிரடி காட்சிகள், பிரம்மாண்டமான காட்சியமைப்புகள் மற்றும் நட்சத்திரங்களின் வலுவான நடிப்பு ஆகியவை இந்த படத்தின் முக்கிய பலமாக பார்க்கப்படுகிறது.

வெளியான முதல் நான்கு நாட்களிலேயே, இந்தியாவில் மட்டும் சுமார் ரூ.541.97 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனுடன், வெளிநாடுகளில் ரூ.149.35 கோடியை வசூலித்துள்ள இந்த படம், உலகளவில் மொத்தமாக ரூ.691.32 கோடியை எட்டியுள்ளது. இவ்வளவு குறுகிய காலத்தில் இப்படியொரு பெரிய வசூலை பதிவு செய்திருப்பது, இந்த படத்தின் வணிக வெற்றியை தெளிவாக காட்டுகிறது.

பெரும்பாலான படங்களுக்கு விமர்சனங்கள் முக்கியமாக இருந்தாலும், சில படங்கள் ரசிகர்களின் ஆதரவு மூலம் பெரிய வெற்றியைப் பெறுகின்றன. “துரந்தர் 2” அதற்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. விமர்சனங்களை மீறியும், ரசிகர்கள் தங்களின் விருப்பத்தால் ஒரு படத்தை உயர்த்த முடியும் என்பதை இந்த படம் நிரூபித்துள்ளது.

Advertisement

Advertisement