நடிகர் அஜித் மற்றும் மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் வெளிவந்த "குட் பேட் அக்லி" திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளையராஜா அவர்களின் பிரபல பாடல்கள் அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை தொடர்ந்து, சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பாடல்களில் "இளமை இதோ இதோ", "ஒத்த ரூபாயும் தாரேன்", மற்றும் "என் ஜோடி மஞ்சக் குருவி" போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை அனைத்தும் இளையராஜாவின் இசையில் வெளியானவை. இளையராஜா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், படக்குழு அனுமதி பெறாமலேயே பாடல்களை பயன்படுத்தியதாகவும், இதற்காக 5 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது. வக்கீல் நோட்டீஸ்க்கு பதிலளித்த தயாரிப்பு நிறுவனம், உரிமையாளரிடமிருந்து சட்டப்படி உரிமை பெற்றதாக தெரிவித்தாலும், அந்த உரிமையாளர் யார் என்பதைக் கூற மறுத்துள்ளது.
இந்த விவகாரத்தின் தொடர்ச்சியாக, படம் வெளியிடப்பட்ட நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்திலிருந்து "குட் பேட் அக்லி" திரைப்படம் விரைவில் நீக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், எதிர்காலத்தில் திரைப்படத்திலிருந்து குறித்த பாடல்களும் நீக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Listen News!