• Apr 27 2024

ரவீந்தர்-மஹாலட்சுமியின் ரிசப்சனா..வைரலாகும் வீடியோ..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

தயாரிப்பாளர் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மஹாலட்சுமி இருவரும் இணைந்து செய்த நிகழ்ச்சி வீடியோ ஒன்று இணையத்தளத்தில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் என்ற அடையாளத்தோடு வலம் வருபவர் தான் ரவீந்தர். இவர் இறுதியாக பாக்கியராஜ், அதுல்யா ரவி நடித்த முருங்கைக்காய் சிப்ஸ் திரைப்படத்தை தயாரித்து இருந்தார் 

அண்மையில் தயாரிப்பாளர் ரவீந்தர் பிரபல விஜே மஹாலட்சுமியை திருமணம் செய்துகொண்டுள்ளார்.மேலும் 2000த்துக்கு பின் 90ஸ் கிட்ஸ் மத்தியில் ஆங்கராக பரிச்சயமானவர் விஜே மகாலட்சுமி சமீபகாலமாக சீரியலில் நடித்து வருகின்றார்.

மேலும் இவர்கள் இருவரும் திருப்பதியில் திருமணம் செய்து கொண்டனர்.இதுகுறித்து அந்த சமயத்தில் தயாரிப்பாளர் ரவீந்தர் தம்முடைய வலைப்பக்கத்தில், “மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க., ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...குட்டி ஸ்டோரி வித் மை பொண்டாட்டி!'” என பதிவிட்டு விஜே மகாலட்சுமிக்கு தாலி கட்டும் திருமண புகைப்படங்களை பதிவிட்டார். இந்த புகைப்படங்கள் வைரலாகின.

 பல்வேறு விமர்சனங்களை சந்தித்த இருவரும் எதையும் கண்டுக்கொள்ளாமல் தமது ரொமான்ஸ் புகைப்படங்களை வெளியிட்ட வண்ணம் இருந்த நிலையில் தற்போது சமூகவலைத்தளத்தில் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது.



இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் இவர்கள் இருவரதும் ரிசப்சன் வீடியோவா என கேட்டு வரும் நிலையில் அது மஹா மற்றும் ரவீந்தருக்கு  பிரபல தொலைக்காட்சியில் ஸ்பெஷல் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றதாம். விஜய் தொலைக்காட்சியில் வந்தாள் மகாலட்சுமி என்ற பெயரில் ஷோ நடந்துள்ளது.

படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோவும் வெளியாகி இருக்கிறது.




Advertisement

Advertisement

Advertisement