• May 10 2024

ராம் வால்க்கில் அழகிய தேவதை போல் ஜொலித்த ராஷ்மிகா மந்தனா…!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

இந்திய திரைப்பட ரசிகர்களால் அதிகம் கொண்டாடப்படும் நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. கன்னடம், தமிழ், மற்றும் தெலுங்கு உள்ளிட்ட பல திரைப்படங்களின் நடித்து புகழ் பெற்ற ராஷ்மிகா மந்தனா 2016 இல் ரிஷப் ஷெட்டி இயக்கத்தில் கன்னட மொழியில் வெளியான 'கிரிக் பார்ட்டி' என்ற திரைப்படத்தில் ரக்‌ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான சைமா விருதினையும் பெற்றுக்கொண்டார். மேலும் இவரது நடிப்பில் உருவாகிய திரைப்படங்களாக 'அஞ்சனி புத்ரா', 'சமக்', 'சலோ', 'கீத கோவிந்தம்', 'எஜமானா', 'தேவதாஸ்', 'டியர் காம்ரேட்' போன்ற பல படங்களைக் குறிப்பிடலாம்.

தனது தனித்துவமான நடிப்பின் மூலம் ரசிகர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் தனி இடம் பிடித்த ராஷ்மிகா தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் ராஷ்மிகா அவ்வப்போது தனது அழகிய புகைப்படங்களையும், தனது படப்பிடிப்பு ஷூட்டிங் தொடர்பான தகவல்களையும் வெளியிடுவது இயல்பான ஒன்றாகும்.

அந்தவகையில் டெல்லியில் நடைபெற்ற பேஷன் வீக் ஒன்றில் வருண் என்பவருடன் ராஷ்மிகா ராம் வால்க்கில் கலந்து கொண்டு அசத்திய அழகிய புகைப்படத்தை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அது மட்டுமல்லாது வீடியோ ஒன்றினையும் வெளியிட்டு இருக்கின்றார். இவை ரசிகர்களால் பெரிதும் லைக்ஸ் செய்யப்பட்டு வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement