• Oct 09 2024

ராஷ்மிகா மந்தனாவுடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறேன்: முன்னாள் காதலர் உருக்கமான பேட்டி..!

Sivalingam / 7 months ago

Advertisement

Listen News!

 நடிகை ராஷ்மிகா மந்தனா கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரக்சித் ஷெட்டி என்பவரை காதலித்ததாக கூறப்படும் நிலையில் இந்த காதல் பிரேக் அப் ஆகிவிட்டதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தனது முன்னாள் காதலி ராஷ்மிகா குறித்து ரக்சித் ஷெட்டி சமீபத்தில் உருக்கமான பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் ராஷ்மிகாவுடன் இன்னும் நான் தொடர்பில் தான் இருக்கிறேன் என்று கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  

நடிகர் ராஷ்மிகா மந்தனா கன்னடத் திரையுலகில் அறிமுகமானாலும் அவருக்கு கை கொடுத்தது தெலுங்கு திரையுலகம் தான். தெலுங்கின் முன்னணியின் நடிகர்களுடன் நடித்து வரும் அவர் தமிழிலும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் சமீபத்தில் அவர் பாலிவுட்டில் நடித்த ’அனிமல்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. மேலும் பாலிவுட்டில் அவர் கிளாமரை அள்ளித் தெளித்த நிலையில் அவருக்கு பாலிவுட்டிலும் ஏராளமான வாய்ப்புகள் குவிந்து வருவதாக கூறப்படுகிறது.



இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் ரக்சித் ஷெட்டி என்பவரை ராஷ்மிகா காதலிக்காக கூறப்படும் நிலையில் சினிமாவில் பிஸி ஆகிவிட்டதால் சினிமாவில் உச்சத்தை அடைய வேண்டும் என்பதற்காக தனது காதலை தியாகம் செய்தார். இருவருக்கும் இடையே பிரேக்கப் ஆனதாகவும் கூறப்பட்டது

இந்த நிலையில் சமீபத்தில் ராஷ்மிகாவின் முன்னாள் காதலர் ரக்சித் ஷெட்டி  பேட்டி ஒன்றில் கூறிய போது ராஷ்மிகாவின் இலக்கு என்பது மிகப்பெரியதாக இருந்ததால் அவருடைய இலக்கிற்கு நான் தடையாக இருக்கக் கூடாது என காதலை தியாகம் செய்து விட்டேன். ஆனாலும் நான் அவரிடம் இன்னும்  தொடர்பில் தான் இருக்கிறேன், அவர் எனக்கு சிறந்த நண்பராக இருந்து வருகிறார்’ என்று கூறியுள்ளார்.

Advertisement