• May 09 2024

ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் ராப் ஸ்டைல் உடற்பயிற்சி- ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பதிவிட்ட வீடியோ

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்திற்கு இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இவர்களில் மூத்த மகளான ஐஸ்வர்யா நடிகர் தனுஷைத் திருமணம் செய்திருந்ததோடு அவர்களுக்கு இரண்டு ஆண் குழந்தைகளும் இருக்கின்றனர்.  இவர் கடந்த ஆண்டு தனுஷைப் பிரிந்ததோடு கெரியரில் கவனம் செலுத்தி வருகின்றார்.

மேலும் இவர் இதற்கு முன்னதாக  தனுஷ் நடிப்பில் 3, கௌதம் கார்த்தி நடிப்பில் வை ராஜா வை உள்ளிட்ட திரைப்படங்களை  இயக்கியவர்.இவர் இயக்கிய முசாபிர் ஆல்பம் சமீபத்தில் வெளியானது . ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அடுத்ததாக லால் சலாம் படத்தினை  இயக்க உள்ளார். இந்த படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கேமியோ பாத்திரத்தில் நடிக்க உள்ளார். 


மேலும் இந்த படத்தில் கதாநாயகனாயாக நடிகர் விஷ்ணு விஷால் & விக்ராந்த் நடிக்கிறார்கள். இந்த படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்கிறார். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.சிலநாட்களுக்கு முன்  ரஜினிகாந்த் உடன் சேர்ந்து திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் ஐஸ்வர்யா .

 பின்னர் அதே நாளில் கடப்பா மாவட்டத்தில் உள்ள அமீன் பீர் தர்ஹாவிற்கு சென்று இசையமைப்பாளர் ரஹ்மான், ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இறை வழிபாடு செய்தனர்.


அதேபோல் சமீபத்தில் இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், பஞ்சபூத தலங்களில் நெருப்பு தலமான திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். இந்நிலையில் ஐஸ்வர்யா, தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரபுதேவா உடன் உடற்பயிற்சி செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். 


அந்த பதிவில், "ரப்பர் மேன் பிரபுதேவா அண்ணாவுடன் இரவு ஷட்டில் ஆட்டத்துக்கு பிந்தைய சில ராப் ஸ்டைல் உடற்பயிற்சி!" என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார். ரப்பர் மேன் என பிரபு தேவாவை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்டுள்ளது வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement

Advertisement