• May 05 2024

ரோஜா வீட்டிற்கு ரம்யா கிருஷ்ணன் திடீர் விசிட்... இணை பிரியாத நட்புக் குறித்து நடிகை வெளியிட்ட நெகிழ்ச்சிப் பதிவு..!

Prema / 9 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவைப் பொறுத்த வரையில் 80, 90-களில் இருந்த நடிகர், நடிகைகளை நம்மால் என்றுமே மறக்க முடியாது. அந்தவகையில் குறிப்பாக 90களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தவர்கள் தான் ரோஜா மற்றும் ரம்யா கிருஷ்ணன். 


இவர்கள் இருவருமே நடிப்பில் தங்களது தங்களுடைய தனித் திறமையினை வெளிப்படுத்தியிருந்தார்கள். மேலும் பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து உச்ச நட்சத்திரமாகவும் விளங்கி வந்தார்கள். இருவருக்குமே அன்று தொட்டு இன்றுவரை ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். 


ரம்யா கிருஷ்ணனைப் பொறுத்தவரையில் இன்றளவும் பல படங்களில் குணச்சித்திர நடிகையாகவும், முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்து வருகின்றார். அதேபோன்று ரோஜா அரசியல் பக்கமாக தன்னுடைய கவனத்தைச் செலுத்தி வருகின்றார். சினிமாவில் ஆரம்பமான இவர்களின் நட்பு இன்றுவரை தொடர்ந்து வருகின்றது. 


இந்நிலையில் ரம்யா கிருஷ்ணன் நேற்றைய தினம் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். அப்போது ரோஜா வீட்டுக்கும் சென்றுள்ளார். தனது வீட்டிற்கு வந்த ரம்யா கிருஷ்ணனை, ரோஜா தனது கணவருடன் வரவேற்று உபசரித்து அவருக்கு அன்பு பரிசாக பெருமாள் சிலை ஒன்றையும் கொடுத்துள்ளார்.

ரம்யா கிருஷ்ணனை நிறைய நாட்களின் பின்னர் நேரில் சந்தித்த மகிழ்ச்சியில் ரோஜா தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு ஒன்றினையும் இட்டுள்ளார். அதாவது இப்பதிவில் "நல்ல நண்பர்கள் நட்சத்திரங்கள் போல, எப்போதும் அவர்களை காண்பது சாத்தியமில்லை;ஆனால், அவர்கள் எப்போதும் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள் என்பது நன்றாக தெரியும். என் வீட்டிற்கு வந்த நட்சத்திரத்தை நான் மிகவும் அன்புடன் வரவேற்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது "இன்றைய எனது நாளை மிகவும் அழகாக மாற்றிய நட்சத்திரத்திற்கு நன்றி, நாம் சினிமா காலத்தில் பயணித்தபோது இருந்த நாட்கள் அப்படியே நினைவிருக்கிறதா? என்று தெரியவில்லை. ஆனால், காலங்கள் கடந்தாலும், நாம் சந்திக்கும்போது நம்மை உணரும் தருணம் மிகவும் அழகானது. மகிழ்ச்சியானது. Recconecting with my bestie" எனவும் குறிப்பிட்டுள்ளார்.


ரோஜாவின் இந்தப் பதிவினைப் பார்த்த ரசிகர்கள் அவர்கள் இருவரது நட்பினையும் பாராட்டி வருகின்றனர். 

Advertisement

Advertisement

Advertisement