• Apr 13 2025

ஸ்டைலான உடையில் கலக்கும் நடிகை...! பார்வையாலேயே ரசிகர்களை மயக்கும் ரம்மியா பாண்டியன்..!

subiththira / 2 days ago

Advertisement

Listen News!

தென்னிந்தியாவின் சின்னத்திரை உலகில் தனது திறமையான நடிப்பு மற்றும் புகழ் என்பவற்றினால் அதிகளவான மக்களின் மனங்களைக் கவர்ந்த நடிகை ரம்மியா பாண்டியன். இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பற்றியதன் மூலம் அதிகளவான ரசிகர்களை தனக்கென உருவாக்கிக் கொண்டார்.  அதனைத் தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.


அத்தகைய ரம்மியா பாண்டியன் தனது புதிய ஸ்டைலிஷான போட்டோஷூட்டின் மூலம் தற்பொழுது இணையத்தைக் கலக்கியுள்ளார். தற்போது ரம்மியா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அழகான மற்றும் கவர்ச்சிகரமான புதிய புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வெளியான தருணத்திலேயே ரசிகர்களிடையே மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.


அவர் பகிர்ந்த போட்டோஷூட்டின் ஒவ்வொரு ஸ்டைலும் தனி அழகாக காணப்பட்டது. அவரது கியூட்டான சிரிப்பு, மாஸான ஆடை என்பன புகைப்படங்களை இன்னும் பிரம்மிக்கச் செய்துள்ளன. ரம்மியாவின் புகைப்படங்களை பார்த்த உடனே, அவரது ரசிகர்கள் " லுக் செம்ம கியூட்" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

குறிப்பாக, ரம்மியா பகிர்ந்த ஒவ்வொரு புகைப்படமும் சில மணி நேரங்களுக்குள்ளேயே ஆயிரக்கணக்கான லைக்குகள் மற்றும் கமெண்டுகளைப் பெற்றுள்ளது. ரம்மியா பாண்டியன் இன்று பெற்றிருக்கும் புகழின் முக்கிய காரணம் அவரது எளிமையான ஸ்டைல் எனவும் சிலர் கூறியுள்ளனர்.


Advertisement

Advertisement