• May 04 2024

ரகுல் ப்ரீத் சிங்கின் மொத்த சொத்து மதிப்பு மட்டும் இவ்வளவா..வெளியானது முழுவிபரம்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இன்று தனது 32 வது வயதை எட்டி உள்ள ரகுல் பிரீத் சிங் தனது 19 வது வயதில் கன்னட திரைப்படம் மூலம் திரையுலகத்திற்கு அறிமுகமானார்.2009 ஆம் ஆண்டு வெளியான கில்லி படம் மூலம் இவர் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். 2017ல் பாலிவுட்டிலும் அறிமுகமானார்.  

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என தென்னிந்திய அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்டு வருகிறார் .அத்தோடு தமிழில் தடையறத் தாக்க, என்னமோ ஏதோ, தீரன் அதிகாரம் ஒன்று, தேவ் உள்ளிட்ட படங்களில் நடித்தது இருந்தார் ரகுல் பிரீத்தி சிங்.

எனினும் தற்போது சிவகார்த்திகேயனின் அயலான், உலக நாயகனின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களிலும் ஒப்பந்தமாகியுள்ளார்.  முன்னணி நாயகிகளில் ஒருவராக இருக்கும் ரகுல் பிரீத் சிங், ஒரு ஆடம்பர மாளிகை, விலை உயர்ந்த வாகனங்கள் மற்றும் பிற மதிப்புமிக்க பொருட்களின் உரிமையாளர் என கூறப்படுகின்றது.


பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உலக நாயகன் கமல் ஹாசன் நடித்து வரும் இந்தியன் 2, படத்திலும் சிவகார்த்திகேயன் நடித்து வரும் 'அயலான்' ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.மேலும் அவரது நிகர மதிப்பு சுமார் 45 கோடி என அறிக்கை சொல்கிறது. ஒரு படத்திற்கு ரூபாய் இரண்டு கோடி வரை இவர் சம்பளம் பெறுகின்றார்.  பல பிராண்ட் விளம்பரங்கள் மற்றும் விளம்பர பிரச்சாரங்களுக்கு மாதம் ரூபாய் 50 லட்சம் வரை இவர் சம்பாதிப்பதாக கூறப்படுகிறது. 

ஹைதராபாத்தில் 16 ஆயிரம் சதுர அடி பரப்பிள் அவருக்கு சொந்தமாக வீடு உள்ளது. தாமரை குலத்திற்கு அருகில் குடியிருப்பு அமைந்துள்ளது. மும்பையிலும் அவருக்கு சொத்து உள்ளது. இவை அனைத்திற்கும் மேலாக நடிகை ஜிம் வணிகத்தை வைத்திருக்கிறார்.அத்தோடு ஹைதராபாத் மற்றும் விசாகப்பட்டினத்தில் F45 செயல்பாட்டு பயிற்சி வசதிகளை அவர் வைத்துள்ளார்.


அத்தோடு நடிகை விலை உயர்ந்த ஆட்டோ மொபைல்களை ஓட்டுவதில் விரும்புகிறார். மெர்சிடஸ் பென்ஸ் ஜிஎல்இ உள்ளிட்ட கலெக்ஷனையும் வைத்திருக்கிறார். மேலும் இந்த விலை உயர்ந்த காரின் மதிப்பு ஒரு கோடி . அத்தோடு அவரது மூன்றாவது கார் பி எம் டபிள்யூ 520, அவரது இரண்டாவது வாகனம் ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட்ஸ் ஆகும் இரண்டு கார்களின் விலை 70 முதல் 75 லட்சம் ரூபாய் வரை இருக்கும் என சொல்லப்படுகின்றது.தனது சகோதரர் அமானுடன் சேர்ந்து, ராகுல் கடந்த ஆண்டு ஆப் அடிப்படையிலான ஸ்டார்ட் அப்பை சொந்தமாக வைத்துள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement