• May 12 2024

மிரட்டலான லுக்கில் ரஜினிகாந்த்... 'தலைவர்-170' சூட்டிங் ஆரம்பம்... புதிய போஸ்டரை வெளியிட்ட லைகா..!

Prema / 7 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 10-ஆம் தேதி வெளியான ஜெயிலர் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் இயக்கிய இந்தப் படம் வசூலில் மாபெரும் சாதனை படைத்தது. இதனால் உற்சாகமான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தனது 170 படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டார்.


இப்படத்தை 'ஜெய்பீம்' புகழ் த.செ.ஞானவேல் இயக்குவதோடு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தில் நடிக்கவுள்ள நடிகர், நடிகைகள் குறித்த தகவல் இணையத்தில் வெளியாகத் தொடங்கி விட்டன. அதாவது துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். 

இந்நிலையில் தலைவர் 170 படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக லைகா தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் கேமரா..கிளாப்..ஆக்‌ஷன்”  என்ற வாசகத்தோடு ரஜினிகாந்தின் சூப்பரான போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது. 

 

Advertisement

Advertisement

Advertisement