• Apr 27 2024

மறைந்த நண்பனின் உடலைப் பார்த்து கையெடுத்துக் கும்பிட்டு கண் கலங்கி நின்ற ரஜினிகாந்த்... நேரில் அஞ்சலி..!

Prema / 11 months ago

Advertisement

Listen News!

நடிகர் சரத்பாபுவின் இறப்பானது திரையுலகினரால் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு பேரிழப்பாக உள்ளது. இதனையடுத்து திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் உட்படப் பலரும் திரண்டு சென்று அவரின் உடலிற்கு தமது அஞ்சலியை செலுத்தி வருகின்றனர்.


அந்தவகையில் மறைந்த நடிகர் சரத்பாபு உடலுக்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்களும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி உள்ளார். அத்தோடு சரத்பாபுவின் குடும்பத்தினருக்கும் ரஜினிகாந்த் ஆறுதல் கூறினார். முத்து, அண்ணாமலை, வேலைக்காரன் ஆகிய படங்களில் ரஜினியுடன் இணைந்து சரத்பாபு நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் மறைந்த சரத்பாபுவின் உடலைப் பார்த்த ரஜினிகாந்த் கை எடுத்துக் கும்பிட்டுக் கண் கலங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பார்ப்பவர்கள் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது.


Advertisement

Advertisement

Advertisement