• Jun 04 2023

நிறைவேறாமல் போன சரத்பாபுவின் ஆசை... காரணம் அறிந்து கண்ணீர் வடிக்கும் ரசிகர்கள்..!

Prema / 1 week ago

Advertisement

Listen News!

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட மொழி படங்களில் நடித்து பிரபலமான சரத்பாபு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவருக்கு வயது 71. அவரின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவிருக்கிறது.


இந்நிலையில் சரத்பாபு குறித்த பல தகவல்கள் வெளியாகிய வண்ணம் இருக்கின்றன. அந்தவகையில் சரத்பாபுவுக்கு போலீஸ் அதிகாரியாக வேண்டும் என்பது தான் ஆசை. ஆனால் அவருக்கு கண் பார்வையில் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக காவல் துறையில் சேர முடியவில்லை. 


இதனால் தான் அவரின் கவனம் திரையுலக பக்கம் திரும்பியதாக கூறப்படுகின்றது. மேலும் "அம்மா நான் அப்பா சொல்வது போன்று குடும்ப பிசினஸை பார்க்க விரும்பவில்லை, நடிகனாகப் போகிறேன்" என்றும் அவரது தாயாரிடம் கூறியிருக்கிறார். அவரின் அம்மாவும் உன் ஆசைப்படியே செய் என சரத்பாபுவிற்கு ஆசி வழங்கியிருக்கிறார்.

இவ்வாறாக அம்மாவின் ஆசியுடன் ராம ராஜ்யம் தெலுங்கு படம் மூலம் நடிகரான சரத்பாபு பின்னர் கே. பாலசந்தரின் பட்டினப் பிரவேசம் படம் மூலம் கோலிவுட் வந்தார். முதல் படத்திலேயே தன் அபார நடிப்பால் தமிழ் ரசிகர்களை கவர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


எது எவ்வாறாயினும் போலீஸ் ஆக வேண்டும் என்ற சரத்பாபுவின் ஆசை நிறைவேறாமல் போனமை ரசிகர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement