• May 04 2024

மறைந்த நடிகர் மயில்சாமியின் இறுதி ஆசையை நிறைவேற்றி வைத்த ரஜினிகாந்த்- தீயாய் பரவும் புகைப்படம்!

stella / 10 months ago

Advertisement

Listen News!


தர்பார், அண்ணாத்த படங்கள் நடிகர் ரஜினிகாந்துக்கு ஹிட் கொடுக்காத நிலையில், ரஜினிகாந்த் தற்பொழுது நெல்சன் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் இவருடன் சிவராஜ்குமார், தமன்னா, சுனில், ஜாக்கி ஷெராஃப், ரம்யா கிருஷ்ணன் உட்பட பலர் நடித்திருக்கின்றார்.

அந்த படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில், அடுத்ததாக மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் பெரும்பாலான காட்சிகள் திருவண்ணாமலையில் படமாக்கப்பட்டு வருகிறது.


ரஜினிகாந்த் நடித்த காட்சிகள் மும்பையில் சில நாட்கள் படமாக்கப்பட்ட நிலையில், மீண்டும் லால் சலாம் படக்குழுவினர் திருவண்ணாமலையில் முகாமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.அண்ணாமலை படத்தில் நடித்த ரஜினிகாந்த் திருவண்ணாமலையில் சாமி தரிசனம் செய்துள்ளார்.


மறைந்த நடிகர் மயில்சாமி அவர்களுக்கு இறுதி அஞ்சலி செலுத்திவிட்டு  ரஜினிகாந்த் பேசும்போது, நான் திருவண்ணாமலை சென்ற சாமி தரிசனம் செய்ய வேண்டும் என்பது மயில்சாமி ஆசை என்று கூறியிருந்தார்.


ரஜினிகாந்த் தனது நண்பரின் ஆசையை நிறைவேற்றவே திருவண்ணாமலை சென்றுள்ளார்.அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement