• Jun 02 2024

டான் இயக்குநருடன் கூட்டணி அமைக்கும் ரஜினி- ஜெட் வேகத்தில் சம்பளத்தை உயர்த்தி விட்டரே- எத்தனை கோடி சம்பளம் தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வரும் ரஜினி தற்பொழுது இயக்குநர் நெல்சன் திலீப்குமாரின் இயக்கத்தில் ஜெயியல் என்னும் படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக ரம்யா கிருஷ்ணன் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் யோகிபாபு, வஸந்த் ரவி, தமன்னா, ஷிவ ராஜ்குமார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. 

அனிருத் இசையமைப்பில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பானது சென்னையில் உள்ள ஆதித்யராம் பிலிம் சிட்டியில்  பிரம்மாண்ட செட் அமைத்து படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இப்படத்திற்கு பின்னர் நடிகர் ரஜினி நடிக்க உள்ள 170-வது படத்தை சிபி சக்ரவர்த்தி இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. 


மேலும் இயக்குநர் சிபி சிவகார்த்திகேயனின் டான் படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர். டான் படம் சூப்பர் ஹிட் பெற்றதை அடுத்தே ரஜினி இந்த முடிவை எடுத்ததாக கூறப்படுகின்றது.இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வருகிற டிசம்பர் மாதம் ரஜினியின் பிறந்தநாளை ஒட்டி ரிலீசாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இந்நிலையில், இப்படத்திற்காக  ரஜினிகாந்திற்கு  ரூ.120 கோடி சம்பளமாக லைகா நிறுவனம் வழங்க உள்ளதாக பேச்சு அடிபடுகிறது. அண்ணாத்த படத்தின் தோல்வியால், ஜெயிலர் படத்திற்கு நடிகர் ரஜினி சம்பளத்தை குறைத்துக் கொண்டதாக கூறப்பட்ட நிலையில், தற்போது தலைவர் 170 படத்துக்காக அவர் வாங்க உள்ள பிரம்மாண்ட தொகை பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது.


Advertisement

Advertisement