• May 05 2024

ரஜினி ரசிகர்களை மீண்டும் வம்பிழுத்த ப்ளூ சட்டை! திட்டித் தீர்க்கும் கமெண்ட்கள்

Aathira / 6 months ago

Advertisement

Listen News!

இளைய தளபதி விஜய் நடித்துள்ள லியோ திரைப்படம் தற்போது உலகளவில் வெளியாகிய நிலையில், வசூல் விபரம் தற்போது பட்டையை கிளப்பி வருகிறது.

'லியோ' படத்தில் த்ரிஷா, சஞ்சய் தத், கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜுன், சாண்டி, மிஸ்கின், ஜார்ஜ் மரியம் உள்ளிட்ட பல வலிமையான நடிகர்கள் நடித்துள்ளனர். 

தமிழகத்தில் மட்டும் சுமார் 850க்கும் மேற்பட்ட திரைகளில் லியோ படம் வெளியாகி இருக்கிறது. இப்படம் முதல் நாளிலேயே ரூ148 கோடிக்கு மேல் உலகளவில் வசூலை வாரிக்குவித்து உள்ளதாக தகவல்கள் வந்தது.இந்நிலையில் இரண்டாம் நாளில் லியோ 200 கோடி வசூலை கடந்து விட்டதாக தகவல்கல் வெளியாகி உள்ளன.

இந்த நிலையில், வசூலில் யார் முன்னிலையில் உள்ளனர் என தளபதி ரசிகர்களும், சூப்பர் ஸ்டார் ரசிகர்களும் போட்டி போட்டு உருட்டி வருகின்றனர். இதை தனக்கு சாதகமாக மாற்றிய ப்ளூ சட்டை மாறன் இருவரையும் வச்சி வச்சி செய்கிறார்.

அதன்படி, ஜெயிலர் வசூலை வடை என்றும் வடை மெஷின் என கலாய்த்து வந்த ப்ளூ சட்டை மாறன், லியோ படத்தின் வசூல் அறிவிப்பை கலாய்க்காமல் மீண்டும் ஜெயிலரையே ட்ரோல் செய்து வருகிறார்.

லியோ படத்தை அஜித் ரசிகர்கள் கலாய்த்தால் கூட பரவாயில்லை.ஆனால் ஜெயிலர் படத்தை எடுத்து வைத்துக் கொண்டு ரஜினி ரசிகர்கள் கலாய்க்கிறாங்களே என விஜய் ரசிகர் ஒருவர் கிண்டல் செய்து மீம்ஸ் ஒன்றை பகிர்ந்துள்ளார்.


குறித்த மீம்ஸை ஷேர் செய்த ப்ளூ சட்டை மாறன் லியோவுக்கு காஷ்மீராவது போனாங்க ஜெயிலர் பக்கா உப்மாப்படம் என ட்வீட் போட்டு ரஜினி ரசிகர்களை மீண்டும் வம்பிழுத்துள்ளார்.

இதேவேளை, பலர் இவரை கேவலமாக திட்டி கமெண்ட்ஸ் தெரிவித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement