• May 07 2024

26 ஆண்டுகள் கழித்து மீண்டும் கதாநாயகியாகும் ராஜராமன் பட நடிகை- 56 வயதிலும் இப்படி பிட்டாக இருக்கின்றாரே

stella / 1 year ago

Advertisement

Listen News!


1987ல் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரைப்படம் தான் ‘எங்க ஊரு பாட்டுக்காரன்’. கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன் நடிப்பில் உருவான இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நிஷாந்தி எனும் சாந்திப்பிரியா. இவர் முதல் படத்திலேயே தமிழக மக்களின் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து பிரபலமானார். மேலும், இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களிலும் நடித்து என இவர் பிரபல நடிகை பானுப்ரியாவின் தங்கை ஆவார்.மேலும், இவர் தமிழ் சினிமாவில் வாய்ப்புகள் குறைய தொடங்கிய உடன் ஹிந்தி டிவி தொடர்களில் நடிக்க சென்றுவிட்டார்.


பிறகு பல ஆண்டுகளாக சினிமாவில் துறையில் இருந்து ஒதுங்கியிருந்த இவர் 1994ஆம் ஆண்டு ஒரு ஹிந்தி படத்தில் நடித்த பின்னர் திரையுலகில் இருந்து விலகினார் என்பதும் பின்னர் தற்போது மீண்டும் நடிக்க இருப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியாகி உள்ளது.


தற்போது சாந்திப்பிரியா அவர்கள் ஜீ ஸ்டூடியோ நிறுவனம் Mx player க்காக முன்னணி நாயகர்கள் நடிக்க பிரமாண்டமாக தயாராகும் இணைய தொடரில் மிக முக்கியமான பாத்திரத்தில் இணைய இந்த வெப்சீரிஸ் இந்தி மற்றும் தமிழில் தயாராக இருக்கிறது. இதற்கான அறிவிப்புகள் கூடிய விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. பல வருடங்களுக்கு பிறகு இவர் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டு இருக்கின்றனர்.


இந்த நிலையில் தற்போது 26 ஆண்டுகள் கழித்து இந்தியாவின் நைட்டிங்கேல் என்று போற்றப்படும் சரோஜினி நாயுடு வாழ்க்கை வரலாறு திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளதாக தனது திரைப்படத்தில் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் இந்த நாட்டை தட்டிஎழுப்பி தடைகளை உடைத்து சுதந்திரத்திற்காக பெரும் பங்காற்றிய ஒரு லட்சிய பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி என்று கூறியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement