• May 04 2024

"குருவே சரணம்"... திரைப்படம் ரிலீசுக்கு முன் தலைவரை பார்த்து ஆசிர்வாதம் பெற்ற ராகவா லாரன்ஸ்....

subiththira / 7 months ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மாஸ் ஹிட் கொடுத்து வெற்றி பெற்ற திரைப்படம் தான் சந்திரமுகி. இத்திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் பி. வாசு தற்போது வெற்றிகரமாக சந்திரமுகி 2 திரைப்படத்தினை இயக்கி உள்ளார்.


சந்திரமுகி பாகம் 2 இல் முக்கிய வேடத்தில்  ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்குவா ,ராதிகா சரத்குமார்  மற்றும் இன்னும் பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர். படத்தில் டெர்லர் , டீசர் , போஸ்டர், பாடல்கள்கள் எல்லாம் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை இன்னும் தூண்டியுள்ளது.


அந்த வகைளில் படப்பிடிப்பு ஆரம்பிக்கும் நாளில்  லாரன்ஸ் , சூப்பர் ஸ்டார் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிச் சென்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதே போல சந்திரமுகி பாகம் இரண்டு திரைப்பட வெளியீடுக்கு முன்பாக சூப்பர் ஸ்டார்  அவர்களை சந்தித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார். 


சூப்பர் ஸ்டார் அவர்களுடன் தான் எடுத்தக்கொண்ட  புகைப்படங்களை தனது டுவிட்டர் பக்கத்தில்  "குருவே சரணம் " என்று பதிவிட்டுள்ளார் நடிகர் லாரன்ஸ். இதோ அந்த புகை படங்கள்.    


Advertisement

Advertisement

Advertisement