• Jan 19 2025

சாட்லைட் உரிமையை மட்டும் வைத்தே படத்தின் மொத்த செலவை ஈடு செய்த புஸ்பா2 ! எத்தனை கோடி தெரியுமா?

Nithushan / 7 months ago

Advertisement

Listen News!

சமீப காலங்களில் திரைப்படங்கள் தியேட்டரில் வெளியாகி வருமானம் ஈட்டுவது மட்டுமின்றி டிஜிட்டல் உரிமை  மற்றும் சாட்லைட் உரிமை போன்றவற்றை விற்பனை செய்வதன் மூலமும் கூட வருமானம் ஈட்டுகின்றது. அவ்வாறே புஷ்பா2 படமும்  செய்துள்ளது.


புஷ்பா 2: தி ரூல் என்பது வரவிருக்கும் இந்திய தெலுங்கு மொழி ஆக்‌ஷன் நாடகத் திரைப்படமாகும் இதனை சுகுமார் எழுதி இயக்கியுள்ளதுடன்  இப்படத்தில் அல்லு அர்ஜுன் டைட்டில் ரோலில் நடிக்கிறார், இவர்களுடன்ஃபஹத் பாசில் , ராஷ்மிகா மந்தனா , தனஞ்சயா , ஜெகதீஸ் பிரதாப் பண்டாரி , ராவ் ரமேஷ் , அஜய் , சுனில் , அனசுயா பரத்வாஜ் , சண்முக் மற்றும் அஜய் கோஷ் ஆகியோர் நடித்துள்ளனர்.


இந்த நிலையிலேயே குறித்த திரைப்படத்தின் சாட்லைட் உரிமையானது சுமார் 130 கோடிக்கு விற்றபனை செய்யப்பட்டுள்ளதுடன் டிஜிட்டல் OTT உரிமையானது 250 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. படத்தின் பட்ஜெட் ரூ. 440 கோடியாக காணப்படும் நிலையில்  OTT மற்றும் சாட்டிலைட் விற்பனையில் மட்டுமே ரூ. 380 கோடி வரை வசூல் செய்துவிட்டது புஷ்பா என்பது குறிப்பிடத்தக்கது.  

Advertisement

Advertisement