• May 04 2024

அசல் முகத்தைக் காட்டாது கபட நாடகம் ஆடுவது யாரு... புதுக் குண்டைத் தூக்கிப் போட்ட கமல்... வெளியானது ப்ரோமோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

21 போட்டியாளர்களுடன் ஆரம்பமாகிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியானது நாளுக்கு நாள் களை கட்டிய வண்ணம் தான் இருக்கின்றது. அதாவது அக்டோபர் 9-ஆம் தேதி தொடங்கிய பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி 60 நாட்களைக் கடந்துள்ளது.

மேலும் இதுவரை மொத்தம் 8 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். அத்தோடு கடந்த இருவாரங்களில் முறையே ராபர்ட் மாஸ்டரும் குயின்ஷியும் வெளியேறினர். மேலும் அவர்களைத் தொடர்ந்து இந்த வாரம் இரண்டு பேர் எவிக்சன் ஆகவுள்ளது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில் இன்றைய நாளுக்குரிய 2ஆவது ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது. அதில் கமல் "60 நாள் ஆகியும் தன்னோட அசல் முகத்தைக் காட்டாத கபட நாடக வேட்டைதாரி யார்" எனக் கேட்கின்றார். அதற்கு மணிகண்டன், ராம் ஆகியோர் ரச்சிதாவைக் கூறுகின்றனர். 

அதுமட்டுமல்லாது ஆயிஷா, தனலட்சுமி ஆகியோர் விக்ரமனைக் கூறுகின்றனர். அதாவது "என்ன தோணுதோ அதை ஓபனாக பேசுறது இல்லை, வெளிய அவர் அப்படித்தான் இருப்பார் என நினைக்கிறேன்" எனக் கூறுகின்றனர்.

அதற்கு உடனே விக்ரமன் "வெளிய நீங்க என்னைப் பார்த்திருக்கிறீங்களா" எனக் கேட்கின்றார். இவ்வாறாக இன்றைய நாளுக்குரிய ப்ரோமோ வெளிவந்திருக்கின்றது.

இதோ அந்தப் ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement