• Jan 19 2025

இதுதான் இந்தியன் 2 தாத்தாவின் கதையா? சித்தார்த்துக்கு தான் முக்கியத்துவமா?

Aathira / 7 months ago

Advertisement

Listen News!

1996 ஆம் ஆண்டு உலக நாயகன் கமலஹாசன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்தியன். இந்த படத்தில் சேனாதிபதி என்கின்ற சுதந்திரப் போராட்ட வீரரின் கேரக்டரை ஏற்று கமல் நடித்திருந்தார்.

சுமார் 26 ஆண்டுகள் கழித்து இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் எதிர்வரும் ஜூலை மாதம் 12ஆம் தேதி உலக அளவில் வெளியாக உள்ளது. இதில் முக்கிய கேரக்டரில் நடிகர் சித்தாத், பாபி சிம்ஹா, காஜல் அகர்வால் மறைந்த நடிகர்களான மனோபாலா, விவேக் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளார்கள்.


இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூன் முதலாம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. ஏற்கனவே இந்த படத்தில் இடம் பெற்ற பாரா என்ற சாங் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது.


இந்த நிலையில் சினிமா விமர்சகர் ஆன அமுத பாரதி வெளியிட்ட தகவலின் படி, சித்தார்த் நாட்டில் உள்ள அநீதிகள் குறித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ வெளியிடும் ஒரு நபராக இருக்க, அவருக்கு பின்வரும் இன்னல்களில் இருந்து அவரை காப்பாற்ற மீண்டும் களத்தில் இறங்குகிறார் இந்தியன் தாத்தா சேனாதிபதி. அதன் பிறகு அநீதிகள் அளிக்கப்பட்டதா என்பதுதான் கதையின் முடிவு என தெரிவித்துள்ளார் தற்போது இந்த தகவல் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement