• May 19 2024

அடுத்தடுத்து பெரிய ஹீரோக்களுடன் இணையும் பிரியங்கா மோகன்- தற்பொழுது யார் தெரியுமா..?

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் திரைப்படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகம் ஆனவர் நடிகை பிரியங்கா மோகன்.

இதன்பின், நடிகர் சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன், சிவகார்த்திகேயனுடன் மீண்டும் டான் என ஒரு நில படங்களில் நடித்து நடித்து இளைஞர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ளார்.

மேலும், விரைவில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து தலைவர் 169 படத்தில் பிரியங்கா மோகன் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஆனால், இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளியாகவில்லை. இந்நிலையில், முன்னணி நடிகர் தனுஷ் நடிக்கவிருக்கும், கேப்டன் மில்லர் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க பிரியங்கா மோகனிடம் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக தகவல் கசிந்துள்ளது.

சத்யஜோதி தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்குகிறார். இவர் இதற்குமுன், ராக்கி, சாணி காயிதம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Facebook : சினிசமூகம் முகநூல்
Twitter: சினிசமூகம் ட்விட்டர்
Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
YouTube : சினிசமூகம் யு டியூப்

Advertisement

Advertisement