• Apr 25 2026

"இருமுடி" படத்தில் பிரியா பவானி சங்கரின் கரெக்டர் இதுதானா.? படக்குழு வெளியிட்ட போஸ்டர்.!

shali / 2 months ago

Advertisement

Listen News!

தெலுங்கு திரையுலகின் “மாஸ் மகாராஜா” என ரசிகர்களால் அழைக்கப்படும் ரவி தேஜா தனது அடுத்த படமான இருமுடி மூலம் மீண்டும் ஒரு மாஸ் கம்பேக் கொடுக்க தயாராகியுள்ளார். முதல் பார்வை போஸ்டர் வெளியான தருணத்திலிருந்தே இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தை இளம் இயக்குநர் சிவ நிர்வாணா இயக்குகிறார். உணர்ச்சிபூர்வமான கதைகளையும் வலுவான கதாபாத்திரங்களையும் உருவாக்குவதில் தனித்துவம் கொண்ட சிவ நிர்வாணா, ரவி தேஜாவுடன் இணைவது ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


‘இருமுடி’ திரைப்படத்தை முன்னணி தயாரிப்பு நிறுவனமான Mythri Movie Makers தயாரித்து வருகிறது. பெரும்பாலான பெரிய பட்ஜெட் திரைப்படங்களை வெற்றிகரமாக வழங்கிய இந்த நிறுவனம், ரவி தேஜாவின் இந்த புதிய முயற்சிக்கும் மிகுந்த நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் குமார் இணைந்துள்ளார். தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பல வெற்றி பாடல்களை வழங்கிய ஜி.வி.பிரகாஷ், ‘இருமுடி’ படத்திற்கும் தனித்துவமான இசையை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், படத்தின் முக்கிய அப்டேட்டாக நடிகை பிரியா பவானி சங்கர் இந்த படத்தில் ‘காவேரி’ என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற தகவல் தற்பொழுது வெளியாகியுள்ளது.

Advertisement

Advertisement