• May 18 2024

3 பிள்ளைகளுக்கு அம்மா ஆகியும் அதே அழகுடன் இன்றுவரை ஜொலிக்கும் பிரீத்தா விஜயகுமார்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் அதிகளவிலான படங்களில் நடித்த பிரபலங்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் விஜயகுமார். வயசானாலும் இவர் இன்றுவரை சினிமாத் துறையிலே தான் பணியாற்றி வருகின்றார்.

விஜயகுமாருக்கு மொத்தம் 5 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இதில் வனிதாவுடன் ஏற்பட்ட சிறு சிறு குழப்பங்கள், மற்றும் சச்சரவுகள் காரணமாக இவர்கள் யாருமே அவருடன் கதைப்பதில்லை.


விஜயகுமாரின் மகள்கள் நால்வரும் எத்தனை அன்பாக இருக்கிறோம் என்பதை தெரிவிக்கும் பொருட்டு அடிக்கடி தங்களின் படங்களை பதிவிட்டு வருகிறார்கள். இவ் ஐந்து பிள்ளைகளில் நால்வர் சினிமாவில் நடித்திருக்கின்றார்கள். இதுவரை சினிமாவில் நடிக்காத ஒருவர் என்றால் அது அனிதா விஜயகுமார் தான்.


மேலும் இதில் பிரீத்தாவை எடுத்துக் கொண்டால் இவர் தமிழ் சினிமா நடிகைகளில் ஒருவராக இருந்தவர். இவர் 1998-ஆம் ஆண்டு 'சந்திப்போமா' என்ற திரைப்படத்தின் வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து 'படையப்பா' என்ற திரைப்படத்தில் ரஜினியின் மகளாக நடித்து பிரபலமானவர்.


இவை தவிர 'ருக்மினி, பொண்ணு வீட்டுக்காரன், துபாய், புன்னகை தேசம்' உட்பட பல படங்களிலும் நடித்திருக்கின்றார். இவ்வாறாக பல படங்களிலும் நடித்து வந்த பிரீத்தா இயக்குநர் ஹரி என்பவரை திருமணம் செய்து குடும்ப வாழ்க்கையில் இணைந்ததும் சினிமாவிற்கு முழுக்குப் போட்டு விட்டார்.


இதனைத் தொடர்ந்து சந்தோசமாக தனது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருகின்ற இவர் தற்போது சேலை அணிந்து தோழிகளுடன் இணைந்து புகைப்படம் எடுத்து அதனை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவாகவும் இட்டிருக்கின்றார்.


Advertisement

Advertisement