• Oct 09 2024

விபத்தில் சிக்கிய பிரபுதேவா பட நடிகர்... தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஜாய் மேத்யூ. அத்தோடு இவர் மலையாளத்தில் வெற்றி பெற்ற 'ஷட்டர்' மற்றும் 'அங்கிள்' என்ற திரில்லர் படங்களுக்கு கதையும் எழுதியுள்ளார். 


மேலும் தமிழில் பிரபுதேவாவுடன் 'தேவி', ஜெய்யுடன் 'பலூன்' மற்றும் 'கேணி' போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதுமட்டுமல்லாது பிரபலமான குணசித்திர நடிகராகவும் திகழ்ந்து வருகின்றார்.

இந்நிலையில் நடிகர் ஜாய் மேத்யூ, கேரளாவில் தேசிய நெடுஞ்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்தில் பலத்த காயம் அடைந்துள்ளார். அதாவது எர்ணாகுளத்தில் இருந்து கோழிக்கோடுக்கு காரில் பயணித்த போது எதிரே வந்த டிரக் மீது அவர் கார் மோதியுள்ளது. 


இதனையடுத்து காயமடைந்த இவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.

Advertisement