• May 07 2024

CWC ஷோவிற்கு வந்த பிரபல நடிகர்கள்.. காலைத் தொட்டு நெற்றிப் பொட்டு வைத்த புகழ்-மணிமேகலை... அட்டகாசமான ப்ரோமோ வீடியோ..!

Prema / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ஷோக்களில் ஒன்று 'குக்வித் கோமாளி'. இந்நிகழ்ச்சியானது ஒரு சமையல் நிகழ்ச்சியாக இருந்தாலும் நகைச்சுவை நிறைந்ததாக நகர்ந்து கொண்டிருக்கின்றது. இந்த நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் 4ஆவது சீசன் அட்டகாசமாக ஒளிபரப்பாகி வருகின்றது.


அந்தவகையில் ஒவ்வொரு வரவும் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த நிகழ்ச்சி விரைவில் முடிவுக்கு வர உள்ளது. இந்நிலையில் தற்போது ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகர்களான சரத்குமார் மற்றும் அசோக் செல்வன் ஆகியோர் வருகை தந்துள்ளனர்.


அந்தவகையில் ஷோவிற்கு வந்த சரத்குமாரின் காலில் விழுந்து, அவர் நடந்து வந்த மண்ணை எடுத்து நெற்றியில் ஒட்டிக் கொள்கின்றனர் புகழ் மற்றும் மணிமேகலை. சரத்குமாரிடம் சமையல் பற்றி கேட்கும் போது அதற்கு அவர் நானும் ஒரு சமையல் காரன் தான் எனப் பதிலளிக்கின்றார். அதுமட்டுமல்லாது அங்குள்ள போட்டியாளர்களுடன் நகைச்சுவையுடன் பேசிக் கொள்கின்றார்.


இதோ அந்த ப்ரோமோ வீடியோ..!


Advertisement

Advertisement

Advertisement