• May 04 2024

திருமணமாகி 2குழந்தைகளுக்கு தாயாக இருக்கும் சினேகாவிற்கே ரூட்டைப் போடும் பிரபல நடிகர்... வைரலாகும் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் அது நம்ம சினேகா தான். இவர் முன்னணி நடிகையாக வலம் வந்தது மட்டுமல்லாமல் 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாகவும் திகழ்ந்து வந்திருக்கின்றார். அதுமட்டுமல்லாது முன்னணி நடிகர்களான அஜித், விஜய், தனுஷ், சிம்பு எனப் பலருடனும் இணைந்து நடித்திருக்கின்றார்.

நடிப்பினைத் தொடர்ந்து இடையில் நடிகர் பிரசன்னாவை காதலித்து இருவீட்டாரினதும் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகு கதாநாயகியாக நடிப்பதை நிறுத்தி விட்டு இரு குழந்தைகளை பெற்றெடுத்து அம்மாவாக குடும்ப வாழ்க்கையில் இணைந்து கொண்டார். 


இந்நிலையில் தற்போது மீண்டும் சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுத்து குணச்சித்திர ரோலில் நடித்து வருகிறார். அதுமட்டுமல்லாது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் நடுவராகவும் பணியாற்றி வருகிறார்.

அந்தவகையில் தற்போது பிரபல தொலைக்காட்சியான ஜீ தொலைக்காட்சி சேனலில் ஒளிப்பரப்பாகி வருகின்ற 'டான்ஸ் ஜோடி டான்ஸ்' நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வருகிறார். திருமணமாகி இத்தனை வருடங்கள் கடந்தும் சினேகா இன்றுவரை இன்னும் இளமையுடன் இருப்பதை பார்த்து பலர் வாயைப் பிளந்து வருகிறார்கள்.

இவர்களில் ஒருவராக தற்போது நடிகர் ஆர்யாவும் இணைந்து இருக்கின்றார். அதாவது ஆர்யா சினேகா நடுவராக பணியாற்றி வருகின்ற அந்த நிகழ்வின் சமீபத்திய எபிசோட்டில் கலந்து கொண்டு "உங்களை எப்படி கரெக்ட் பண்றதுன்னே சத்தியமா தெரியல" என்ற டயல்லாக்கை கூறி வழிந்துள்ளார்.


அதற்கு உடனே நம்ம சினேகா பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் இடம்பெற்ற "பாடேன்" என்ற நயன் தாரா டயலாக்கையும் சிரிச்சுக்கிட்டே கூறியுள்ளார். இந்த வீடியோ ஆனது தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement

Advertisement

Advertisement