• May 09 2024

கேன்ஸ் விழாவில் ரசிகர்களை கவர்ந்திழுத்த பூஜா ஹெக்டே -வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

2012இல் மிஸ்கின் இயக்கத்தில் வெளிவந்த முகமூடி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்தார். இதுவே இவரது திரையுலக என்றி .இதன் பின் இவருக்கு தமிழில் அவ்வளவு வாய்ப்புகள் கிடைக்கவில்லை.இதனால் தெலுங்கு, ஹிந்தி திரையுலக பக்கம் தன் கவனத்தை திருப்பினார்.

இந்நிலையில், நல்ல படவாய்ப்புகளும், அதில் கிடைத்த வெற்றிகளும் முன்னணி நடச்சத்திரங்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தன.அந்தவகையில் "கபி ஈத் கபி தீவாளி "எனும் படம். இப்படத்தில் சல்மான் கானுக்கு ஜோடியாக பூஜா நடித்தார். இதுமட்டுமின்றி தெலுங்கில் சிரஞ்சீவி மற்றும் ராம் சரனுடன் இணைந்து "ஆர்ச்சர்யா" படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார்.டோலிவுட்டில் நடித்த படங்களெல்லாம் ஹிட்டாக அமைந்ததால், அவரது மார்க்கெட்டும் பன்மடங்கு உயர்ந்தது.

இதையடுத்து நடிகை பூஜா ஹெக்டேக்கு பிரமாண்டமான படவாய்ப்புகள் குவியத்தொடங்கின.தமிழில் நெல்சன் இயக்கத்தில்நம்ம தளபதி விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தில் நடிகை பூஜா ஹெக்டே நம்ம தளபதி ஜோடியாக நடித்தார்.ஆவலோடு எதிர்பார்த்திருந்த இத்திரைப்படம் எதிர்பார்த்தளவு வெற்றியை கொடுக்காமல் கலவையான விமர்சங்களையே பெற்றன.

குறுகிய காலத்திலே முன்னணி நடிகருடன் நடித்த பூஜா 75 ஆவது கேன்ஸ் திரைப்பட விழாவில் மிகப்பெரிய ஒரு மகுடம் சூடப்பட்டுள்ளது.அதாவது 75வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு நடிகை நயன்தாரா,தமன்னா.பூஜா ஹெக்டே ஆகிய நடிகைகளை வரவேற்பதற்கு சிவப்பு கம்பளத்தில் நடப்பதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 75வது கேன்ஸ் திரைப்பட விழாவிற்கு வருகை தந்த நடிகை பூஜா ஹெக்டேயின் தோற்றம் இணையதளங்களில் மிகவும் வைரலாகின்றது.இவரது தோற்றத்தைக் கண்டு ரசிகர்கள் முற்றிலும் ஸ்தம்பித்துவிட்டனர். ஸ்ட்ராப்லெஸ் இறகு கவுனில் கனவு கன்னியாக தோன்றியிருந்தார் என்று பூஜா ஹெக்டேயின் புகைப்படங்களுக்கு இவரது ரசிகர்கள் நல்ல கமெண்ட்ஸை பதிவிட்டு வருகின்றனர்.

https://www.youtube.com/embed/y2PXJAR7FsI


பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement

Advertisement