• May 05 2024

டிஜே பிளாக்கோடு காரில் குடும்பத்தினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த பூஜா..ஒரு வழியா சொல்லிட்டாங்களே...!

Aishu / 11 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி பல பேருடைய வாழ்க்கையை புரட்டி போட்டிருக்கிறது. அத்தோடு அதில் பாடகர்கள் மட்டுமல்லாமல் முதல் முறையா டிஜேபிளாக்கும் இடம் பிடித்திருக்கிறார். அத்தோடு இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களுக்கு பின்னணி பாடல்கள், டைமிங் காமெடி போட்டு பிரபலமான டிஜே பிளாக் இப்போது பூஜாவிற்கு அதிகமாக பாட்டு போட்டு பிரபலமாகி வருகிறார்.

பூஜாவுக்கு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாட்டு போட்டு பல இளைஞர்களின் மனதையும் கவர்ந்து விட்டு டிஜே பிளாக் நிஜத்தில் பூஜாவை காதலிக்கிறாரா? இல்லையா? என்று பலருக்கும் கேள்வி எழும்பிக் கொண்டே இருக்கிறது. எனினும்  இந்த நிலையில் சில வாரங்களுக்கு முன்பு பூஜாவின் வீட்டில் இருந்து அவருடைய உறவினர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டிஜே பிளாக்கை திட்டி தீர்த்து இருந்தனர். எனினும் அதனை உண்மை என்று ரசிகர்களும் முதலில் நம்பி விட்டார்கள்.

இதன் பிறகு நாங்களும் டிஜே பிளாக்கின் தீவிரமான ரசிகர்கள் நீங்கள் இப்படி பாட்டு போட்டதனால் தான் எங்களுடைய பூஜா இவ்வளவு பிரபலம் அடைந்திருக்கிறார் என்று கூறி டிஜே பிளாக்க்கு நன்றி கூறி அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்திருந்தனர். எனனும் அதை தொடர்ந்து தன்னுடைய வேலையில் மேலும் உற்சாகமான டிஜே பிளாக் ஒவ்வொரு பாடல்களும் காதல் ரசம் சொட்ட சொட்ட எடுத்து வைத்து ஒலிக்க விடுகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  சமீபத்தில் கூட விஜய் டிவியில் எட்டாவது ஃபிலிம் ஃபேர் அவார்ட் கிடைக்கும்போது பூஜாவுக்கு பாட்டு போட்டு பிரபலமான டிஜே பிளாக்குகும் அவார்டு கொடுத்து அவரையும் கண்கலங்க வைத்து பலருடைய வயிற்றெரிச்சலையும் கமெண்ட் களில் பெற்றுக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் தற்போது வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

பூஜாவின் பிறந்தநாளுக்கு பூஜாவின் சொந்த ஊரான பாண்டிச்சேரிக்கு டிஜே பிளாக் அவர் புதியதாக வாங்கிய காரில் பூஜாவை கூட்டிக்கொண்டு சென்றிருக்கிறார். அத்தோடு குடும்பத்தினர் அனைவருக்கும் நேரில் சென்று இன்ப அதிர்ச்சி கொடுத்த அந்த வீடியோ சோசியல் மீடியாவில்  வெளியானதை தொடர்ந்து இவர்கள் நிஜத்தில் நண்பர்களா? இல்லை காதலர்களா? என்று கணிக்க முடியாமல் கருத்துக்களை சிதறவிடுகிறார்கள்.

ஆனால் பூஜாவும் டிஜே பிளாக்கும் நாங்கள் அந்த நிகழ்ச்சியின் சுவாரசியத்திற்காக தான் அப்போது அப்படி பேசிக்கொள்வோம். ஆனால் நிஜத்தில் அப்படியெல்லாம் கிடையாது. அத்தோடு நிஜத்தில் நல்ல நண்பர்கள் என்று விளக்கமும் கொடுத்திருக்கிறார்கள்.

Advertisement

Advertisement

Advertisement