• May 08 2024

பொன்னியின் செல்வன் படத்தின் அனைத்து பாடல்களையும் ரிலீஸ் செய்தாச்சு- யாரெல்லாம் பாடி இருக்கிறாங்க தெரியுமா?

stella / 1 year ago

Advertisement

Listen News!

புகழ் பெற்ற நாவல் ஆசிரியரின் பொன்கியின் செல்வன் நாவலைத் தழுவி உருவாகியுள்ள திரைப்படம் தான் பொன்னியின் செல்வன்.இப்படத்தை பிரமாண்ட இயக்குநர்களில் ஒருவரான மணிரத்னம் இயக்கியுள்ளார். இப்படம் செம்டெம்பர் மாதம் 30ம் திகதி வெளியாகவுள்ளது.


இந்த படத்தின் முதல் லுக் கதாபாத்திர போஸ்டர்கள், டீசர், சிங்கிள் பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.இப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்றைய தினம் நடைபெறவுள்ளதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டரங்கில் இதற்கான நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ரஜினிகாந்த் & கமல்ஹாசன் வருகை தர உள்ளனர்.


இந்நிலையில் இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் வெளியாகி உள்ளது.  Adventure, Angst, Joy, Pain, Bloodlust, Celebration என்ற உள்ளடக்கத்தில் 6 பாடல்கள் வெளியாகி உள்ளன. இதில் பொன்னி நதி (Adventure) மற்றும் சோழா சோழா (Pain) பாடல்கள் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றன. இவை தவிர ராட்சஸ மாமனே (Joy), சொல் (Celebration) , தேவராளன் ஆட்டம் (Blood Lust) ,  அலை கடல் (Angst) ஆகிய பாடல்கள் வெளியாகி உள்ளன.


ராட்சஸ மாமனே பாடலை ரஹ்மான் உடன் இணைந்து ஸ்ரேயா கோஷல் பாடியுள்ளார். தேவராளன் ஆட்டம் பாடலை யோகி சேகர் பாடியுள்ளார். சொல் பாடலை ரக்ஸிதா சுரேஷ் பாடியுள்ளார். அலை கடல் பாடலை அந்தாரா நந்தி பாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement

Advertisement