• May 18 2024

தந்தை, அம்மா மற்றும் அக்காவுடன் நிற்கும் சிவகார்த்திகேயன்- அப்படியே அவங்க அப்பா மாதிரியே இருக்காங்க பாருங்க

stella / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்னும் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் இதனைத் தொடர்ந்து மூன்று படத்தின் மூலம் குணச்சித்திர வேடத்தில் நடித்திருந்தார்.பின்பு மெரினா படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகினார்.

இதனைத் தொடர்ந்து இவர் நடிப்பில் வெளியாகிய மகங்கொத்திப்பறவை எதிர் நீச்சல் வருத்தப்படாத வாலிபர் சங்கர் போன்ற திரைப்படங்கள் இவருடைய கெரியரில் சிறந்த திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்ததோடு முக்கியமான நடிகராக வலம் வந்தார்.

மேலும் இவரது நடிப்பில் இறுதியாக வெளியாகிய  டாக்டர், டான் உள்ளிட்ட இரண்டு திரைப்படங்களும் உலகளவில் ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.இதனால் தவிர்க்க முடியாத நடிகரக மாறியுள்ள இவர் நடிப்பில் தற்பொழுது ப்ரின்ஸ் என்னும் திரைப்படம் உருவாகி வருகின்றது.


இது தவிர  மடோன் அஷ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படத்தில் சிவகார்த்திகேயனுடன் அதிதி ஷங்கர் ஜோடியாக நடித்து வருகிறார்.இந்நிலையில் நடிகர் சிவகார்த்திகேயனின் தந்தை அவரின் சிறுவயதிலே இறந்துவிட்டது அனைவரும் அறிந்த விஷயம். 

தொலைக்காட்சிகளில் அவரின் தந்தை குறித்து பெருமிதமாகவும், எமோஷனலாகவும் சிவகார்த்திகேயன் பேசவதை பார்த்திருக்கிறோம்.அப்படியான சிவகார்த்திகேயன் அவரின் தந்தையுடன் எடுத்துகொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. சிறுவயதில் சிவகார்த்திகேயன் அவரின் தந்தை, அம்மா மற்றும் அக்காவுடன் உள்ளார். இந்தப் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருவதையும் காணலாம்.


Advertisement

Advertisement