• May 01 2024

பொன்னியின் செல்வன் படத்தில் எனக்கு குறைவான காட்சிகள் தான்- அடடே இந்த நடிகருக்கா இந்த நிலைமை?

stella / 1 year ago

Advertisement

Listen News!

பாகுபலி, ஆர்.ஆர்.ஆர் போன்ற படங்களுக்குப் பிறகு இந்தியாவில் பெரும் பொருட்செலவில் 2 பாகங்களாகத் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் படத்திற்கு உலகத் தமிழர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இப்படத்தை இயக்குநர் மணிரத்னம் இயக்கி வருவதோடு இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, த்ரிஷா, ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன், கிஷோர் உள்ளிட்ட  என பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.


இந்த படத்திற்கு ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். சமீபத்தில் இப்படத்தின் ‘’பொன்னி நதி’’ என்ற பாடல் ரிலீஸானது.  இதையடுத்து வீழ சோழா ஆகிய பாடல்கள் அடுத்தது வெளியாகி ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தியது. இரண்டு பாகங்களாக உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ளது.

இந்த நிலையில்,இப்படத்தின் ப்ரமோஷன் பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ள நிலையில், இப்படத்தின் ஸ்னீக் பீக் காட்சிகள்   நேற்று  வெளியானது.இந்நிலையில், இப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடித்துள்ள பார்த்திபன் தன் டுவிட்டர் பக்கத்தில்,

''சோழ தேசம் நோக்கி….

பொ.செ-வில் நான் வரும் காட்சிகள் சொற்பமே.

என் பாத்திரத்தின் பெயரிலேயே’சின்ன’உள்ளது.

எனவே ….

எதிர்பார்ப்பே இல்லாமல் ஒரு சரித்திர பதிவு,மாபெறும் முயற்சி,வெற்றி பெற என்னால் இயன்ற Promotional குதிரை சவாரி. Let’s celebrate PS-1'' எனப் பதிவிட்டுள்ளார்.பார்த்திபன் குறைவான காட்சிகளில் வந்தாலும் பார்த்திபன் தனிமுத்திரை பதிப்பார் என ரசிகர்கள் கூறி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது


Advertisement

Advertisement

Advertisement