• May 06 2024

அனைவரும் எதிர்பார்த்து காத்திருந்த பொன்னியின் செல்வன் 2 டிரைலர் வெளியானது..!

Aishu / 1 year ago

Advertisement

Listen News!

இரண்டு பாகங்களாக உருவாக்கியுள்ள இந்த படத்தின், முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வெளியான நிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 28ஆம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாக உள்ளது.

இப்படத்தின் பிரமோஷன் பணிகளை, இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே துவங்கினர் பட குழுவினர்,  அடுத்தடுத்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கும் விதமான தகவல்களை வெளியிட்டு வருகின்றனர். அந்த வகையில் இன்று இசையின் நாயகன் ஏ ஆர் ரகுமான் இசையில் உருவாக்கியுள்ள பாடல்களை வெளியிடுவது மட்டுமின்றி, படத்தின் டிரைலரும் வெளியாகுமெ ன அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, 'பொன்னியின் செல்வன் 2' படத்தையும் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிக பிரமாண்டமாக நடந்து வருகிறது.

இதில் உலக நாயகன் கமலஹாசன், இயக்குநர் மணிரத்தினம், ஜெயம் ரவி, பார்த்திபன், சரத்குமார், விக்ரம், ஐஸ்வர்யாராய், ஐஸ்வர்யா லட்சுமி, திரிஷா,குஷ்பு போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

அத்தோடு முதல் பாகத்தில் மிகப்பெரிய ட்விஸ்டுடன் இப்படம் நிறைவடைந்த நிலையில், இரண்டாம் பாகத்தில் இதற்கான விடைகள் கிடைத்துவிடும் என்பது ட்ரைலரிலேயே தெரிகிறது. 


Advertisement

Advertisement

Advertisement