• May 03 2024

15 வயது சிறுமி கொலை... தப்பிய கைதியை கண்டுபிடிக்க உதவிய டிவி நிகழ்ச்சி... ஆச்சரியமடைந்த போலீஸார்...!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சினிமா வட்டாரங்களில் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வரும் விடயம் என்னவென்றால் ஒரு டிவி ஷோ ஒன்றின் மூலமாக குற்றவாளி ஒருவர் சிக்கியுள்ளமை தான்.

அதாவது கர்நாடகாவில் உள்ள ஒரு ரப்பர் எஸ்டேட்டில் சூப்பர்வைஸராக விஜயன் எனும் பெயரில் வேலை செய்து வந்த நபரான ராஜேஷ் என்பவர் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு அவரது தங்க நகைகளை திருடிச்சென்ற நிலையில் அந்த சிறுமி இறந்தே போனார். 


வட்டப்பாறை அருகே நடந்த இந்த கொடூர சம்பவத்தை தொடர்ந்து சில வாரங்களில் சிறுமியைக் கொலை செய்த அந்த கொடூரனை கைது செய்து போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 3-ஆம் தேதி கேரள நீதிமன்றம் ராஜேஷ் என்ற அந்த குற்றவாளிக்கு அதிகபட்ச தண்டனையாக மரண தண்டனை விதித்தது. மேலும் இன்னொரு வழக்கிலும் ஏற்கெனவே அவருக்கு 25 ஆண்டுகால கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டது. 


சிறுமியின் மரணத்தை தொடர்ந்து திருவனந்தபுரத்தில் பூஜபூராவில் உள்ள மத்திய சிறைச்சாலையில் அவர் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக அங்கிருந்து திறந்தவெளி சிறைச்சாலைக்கு மற்ற கைதிகளுடன் அவரும் மாற்றப்பட்ட நிலையில், அங்கிருந்த சீனிவாசன் என்பவருடன் சேர்ந்து திட்டம் போட்டு அங்கிருந்து எஸ்கேப் ஆனார்.

சீனிவாசனை சில வாரங்களில் காவல்துறையினர் தேடிப் பிடித்த நிலையில், ராஜேஷை அவர்களால் எவ்வளவோ முயன்றும் கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த சிறையில் இருந்த 2 சிறை அதிகாரிகளையும் இந்த பிரச்சனை காரணமாக சஸ்பெண்ட் செய்தனர். எங்கே தேடியும் ராஜேஷ் கிடைக்காத நிலையில், கிட்டத்தட்ட அந்த வழக்கு முடித்து வைக்கப்படும் நிலையில் இருந்தது.


இவ்வாறான ஒரு நிலையில் தான் டிவி நிகழ்ச்சி ஒன்று அக்குற்றவாளியை சிக்க வைத்துள்ளது. அதாவது மலையாள சேனலான மாத்ருபூமியில் 'மோஸ்ட் வான்டட்' எனும் கிரைம் ஷோ ஒளிபரப்பாகி வருகிறது.

மக்கள் மத்தியில் பிரபலமான அந்த நிகழ்ச்சியில் 15 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட நபர் மாயமானது குறித்த செய்தியையும் ஒளிபரப்பி இருந்தனர்.

அந்த செய்தியை பார்த்து ஷாக்கான நபர் ஒருவர் இந்த ஆளை எங்கேயோ பார்த்து இருக்கிறோமே என யோசித்து தனது காவல்துறை நண்பருக்கு தகவல் தெரிவிக்கவே அந்த குற்றவாளியை தற்போது கைது செய்து மீண்டும் கம்பி எண்ண வைத்துள்ளனர்.


ஏற்கெனவே இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் சிறையில் இருந்து தப்பி ஓடிய வழக்கும் தற்போது அவன் மீது பாய்ந்துள்ளது. இக்கைதி குறித்த தகவலை காவல் துறைக்கு கூறிய அந்த நபருக்கு சன்மானம் வழங்கப்பட்டுள்ளது.அத்தோடு அந்த டிவி ஷோவிற்கும் பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது ஒரு டிவி ஷோ எந்த அளவுக்கு மிஸ்ஸான கைதியை பிடிக்க உதவி இருக்கு என கேரள போலீஸார் உட்படத் திரைப்பிரபலங்கள் பலரும் வியந்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement