• Jan 18 2025

மனசை கல்லாகிட்டு இதை மட்டும் பண்ணிடுங்க பாக்கியா.! ஆவேசத்தில் கோபி சொன்ன வார்த்தை

Aathira / 1 month ago

Advertisement

Listen News!

பாக்கியலட்சுமி சீரியலின் இன்றைய எபிசோட்டில், கோபி மூலமாக வந்த சான்ஸை வேண்டாம் என்று சொல்லப் போகின்றேன். படம் எடுக்கும் நினைப்பை விட்டு விட்டு படித்த படிப்பிற்கு வேலை தேட போறேன் என்று எழில் சொல்ல, பாக்கியா அப்படி ஒன்றும் யோசிக்க வேண்டாம் படம் பண்ணுவது தான் உனது கனவு. அந்த சான்ஸ் யார் மூலமாக வந்தா உனக்கு என்ன? இதை கட்டாயம் பண்ணு என்று சொல்லுகின்றார்.

இதை தொடர்ந்து  பாக்யா ஈஸ்வரியை சாப்பிட அழைக்க அவர் வேண்டாம் என்று சொல்லுகின்றார். மேலும் தான் யோசித்துப் பார்த்தேன் நடந்ததெல்லாம் நடந்துவிட்டது. நீ செழியனுடன் போய் கோபிக்கு கொடுத்த கம்பளைண்ட் வாபஸ் வாங்கு என்று சொல்லுகின்றார்.

ஆனாலும் பாக்கியா  நான் கம்பளைண்ட் வாபஸ் வாங்க மாட்டேன் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் நீங்க ஜெயிலுக்கு போன போது நான் கமலாவிடம் கம்பளைண்டை வாபஸ் வாங்குமாறு கேட்க அவர்கள் வாங்கவில்லை. உங்களது மகனும் வாபஸ் வாங்க சொன்னாரா என்று தெரியவில்லை. கைகட்டி வேடிக்கை மட்டும் தான் பார்த்தார் என்று பதிலடி கொடுக்கின்றார்.


அப்படி என்றால் எனக்காகவா பழிவாங்குகின்றாய் என்று ஈஸ்வரி கேட்க, உங்களுக்காக இல்லை. இதை எனக்காகத்தான் நான் செய்தேன். இனி அவர் என் வழியில் குறுக்க வரக்கூடாது என்று தனது முடிவில் ஆணித்தரமாக இருக்கின்றார்.

அதன்பின் செல்வி பாக்யாவிடம் மனச கல்லாக்கி கொண்டு கோபி சார் வெளிய வந்ததும் ஈஸ்வரி அம்மாவா அவருடன் அனுப்பி வையுங்க. அப்படியே இனியாவையும் அவருடன் அனுப்பி வையுங்கள் என்று பாக்யாவுக்கு சொல்லுகின்றார் .

அடுத்த நாள் பாக்யாவின் வீட்டிற்கு சென்ற செய்தியாளர்கள் பாக்கியாவிடம் ரெஸ்டாரண்ட் பிரச்சினை பற்றி கேட்கின்றார்கள்.. பாக்யாவும் நடந்தவற்றை சொல்ல, அங்கிருந்த இனியா இப்போ உனக்கு சந்தோஷமா? நாளைக்கு என்னுடைய நண்பர்கள் எல்லாரும் என்னை கேலி செய்வார்கள் என்று கோபித்துக் கொண்டு செல்லுகின்றார்.

இறுதியாக செழியன் கோபியை பார்ப்பதற்கு போலீஸ் ஸ்டேஷன் செல்லுகின்றார். அங்கு கோபிக்கு ஜாமீன் கிடைக்கின்றது. கோபி இருந்தாலும் ஒரு பொம்பளைக்கு இவ்வளவு அகங்காரம் கூடாது.ஒரு நாள் ஃபுல்லா ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டா என்று கோபத்தின்  உச்சியில் இருக்கின்றார் இதுதான் இன்றைய எபிசோட்.


Advertisement

Advertisement