• May 05 2024

வீட்டில் வைக்கப்பட்டுள்ள மனோபாலாவின் உடல்... கதறி அழும் உறவுகள்... கண் கலங்க வைத்த புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக சுறுசுறுப்பாக செயல்பட்டு வந்த நடிகர் மனோபாலா இன்றைய இளம் தலைமுறைக்கும் மிகவும் தெரிந்த முகமாகவே இருந்தார். குறிப்பாக 200க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள மனோபாலா, ரஜினி, விஜய், அஜித், தனுஷ், ஜெயம் ரவி, விக்ரம், சூர்யா உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.


இவ்வாறு சினிமாவில் பிசியாக நடித்து வந்த அவர் கடந்த நான்கு மாதமாக வீட்டில் இருந்தே கல்லீரல் பிரச்சனைக்காக சிகிச்சை பெற்று வந்தார். மேலும் கடந்த ஒரு வாரமாக கல்லீரல் பிரச்சனை தீவிரமானதை அடுத்து அவதிப்பட்டு வந்த மனோபாலா இன்று உயிரிழந்தார். அந்தவகையில் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அவரது உயிர் பிரிந்தார். இவரது மறைவு செய்தியை கேட்டு திரை பிரபலங்கள் மற்றும் அவரது ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில் இவரின் இறந்த உடல் குறித்த புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வருகின்றன. இதில் அவரின் உறவினர்கள் சுற்றி நின்று அழுவதனையும் பார்க்க முடிகின்றது.



Advertisement

Advertisement

Advertisement