• Apr 26 2024

ஜீவா, ஸ்ரீகாந்த், சுந்தர்.சி எனப் பல நட்சத்திரங்கள் இணைந்து நடாத்திய ப்ரோமோஷன் நிகழ்வு... வைரலாகும் புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பிரபல இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் மூன்று நாயகர்கள் மற்றும் மூன்று நாயகிகள் நடிக்கும் திரைப்படம் 'காபி வித் காதல்'. இப்படத்தில் ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த், மாளவிகா சர்மா, அம்ரிதா ஐயர், ரைசா வில்சன் மற்றும் ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் நடித்திருக்கின்றனர்.


மேலும் இவர்களுடன் இணைந்து யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி, பிரதாப் போத்தன், விச்சு விஸ்வநாத், சம்யுக்தா ஷண்முகம், திவ்யதர்ஷினி (டிடி), அருணா பால்ராஜ், பேபி விர்த்தி ஆகியோரும் நடித்துள்ளனர்.


அத்தோடு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இப்படத்தை குஷ்புவின் அவ்னி சினி மேக்ஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் பென்ஸ் மீடியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. 


இப்படத்தின் உடைய டிரைலர் ஆனது சமீபத்தில் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமல்லாது காபி வித் காதல் திரைப்படமானது நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். மேலும் படத்தின போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டு ரசிகர்களை உற்சாகம் அடையச் செய்துள்ளனர்.


இதனைத் தொடர்ந்து படக்குழுவினர் ப்ரோமோஷன் நிகழ்வுகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் பல நடிகர் நடிகைகளும் கலந்து கொண்டிருக்கின்றனர். இப்புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் பயங்கர வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement

Advertisement