• May 09 2024

புள்ளி வச்ச மானே கோலம் போடுவேனே- தெறி பட பாடலுக்கு சூப்பரான ரீல்ஸ் பண்ணிய முத்து- வைரலாகும் வீடியோ

stella / 10 months ago

Advertisement

Listen News!


சீரியலுக்கே பேர் போன சேனல் என்றால் அது விஜய் தொலைக்காட்சி தான். இதில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் அனைத்திற்குமே ஏராளமான ரசிகர்கள் உண்டு. மேலும் இதில் அடிக்கடி புதிய சீரியல்களும் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. 

அவ்வாறான புதிய சீரியல்களில் ஒன்று தான் 'சிறகடிக்க ஆசை'. சமீபத்தில் ஆரம்பித்து இருந்தாலும் இந்த சீரியல் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது. இதனால் ரசிகர்களும் தங்களது ஆதரவினைத் தொடர்ந்து கொடுத்து வருகின்றனர்.


இந்த சீரியலுக்கு நல்ல ரீச் கிடைப்பதற்கு காரணம் இதில் முத்து என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வரும் வெற்றி வசந்த் எனலாம். இவரது இயல்பான நடிப்பு ரசிகர்களைக் கவர்ந்து வருகின்றது. இவர் இதற்கு முதல் பல வெப் சீரியல்களிலும் குறும் படங்களிலும் நடித்தவர் என்பதும் முக்கியமாகும்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் ரீல்ஸ் வீடியோ செய்து பதிவிடுவதையும் வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்பொழுது இவர் வெளியிட்டிருக்கும் வீடியோ ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement