• May 05 2024

பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணனும் ஐஸ்வர்யாவும் காதலிக்க ஆரம்பித்து விட்டார்களா?- ஓபனாகவே தீபிகா போட்ட பதிவு

stella / 10 months ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையப்படுத்தி ஒளிபரப்பாகும் இந்த சீரியலுக்கென்று தனி ரசிகர் பட்டாளம் காணப்படுகின்றது. இந்த சீரியல் தற்பொழுது ஹிந்தியிலும் ரீமெக் செய்யப்பட்டு ஒளிபரப்பாகி வருகின்றது.

இந்த தொடரில் கண்ணன்-ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் சரவணன் மற்றும் தீபிகா ஜோடியாக நடிக்கிறார்கள்.இவர்கள் காதலிக்கிறார்கள் என ரசிகர்கள் பேசினாலும் இதுவரை அவர்கள் உறுதிப்படுத்தாமலேயே இருந்தனர்.


இந்த நிலையில் தான் நடிகை தீபிகா, சரவண விக்ரமுடன் இருக்கும் படத்தை ஸ்டோரியில் பகிர்ந்து, நாம் ஒன்றாக இருக்க வேண்டும். அதுதான் டீல் மை டியர் என பதிவு செய்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் அப்போ இருவரும் காதலிக்கின்றீர்களா எனக் கேட்டு வருகின்றனர்.


மேலும் இவர்கள் இருவரும் சீரியலில் மட்டுமல்லாது சமூக வலைத்தளங்களிலும் ஆக்டீவாக இருப்பதோடு இருவரும் சேர்ந்து பல வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Advertisement