• Jan 19 2025

சரவணன் வேறொரு பெண்ணை காதலித்தாரா? தங்கமயில் அதிர்ச்சி.. அடிதடி சண்டையால் பரபரப்பு..!

Sivalingam / 8 months ago

Advertisement

Listen News!

’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் இன்று தங்கமயிலை  சரவணன் வீட்டுக்கு பைக்கில் அழைத்துச் செல்லும் காட்சிகள், தனது அப்பாவை அடித்தவனை திருப்பி அடிக்க வேண்டும் என்று செந்தில் மற்றும் கதிர் ஆகிய இருவரும் காத்திருக்கும் காட்சிகள் அவர்களை தேடி வரும் சரவணன் உள்ளிட்ட பரபரப்பான காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

விஜய் டிவியின் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தன்னை பார்க்க வந்த தங்கமயில் இடம் ரொமான்ஸ் ஆக சரவணன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென தங்கமயில் ’நீங்கள் யாரையாவது காதலித்து இருக்கிறீர்களா? என்று கேட்கிறார்.

அப்போது அதிர்ச்சி அடையும் சரவணன் ’ஒரு காதல் இருந்தது, ஆனால் அதெல்லாம் ரொம்ப நாட்களுக்கு முன்னர்’ என்று கூறி சமாளித்து ’அதை எல்லாம் இன்னொரு நாள் நான் உன்னிடம் சொல்கிறேன் என்று கூறுகிறார். தனது வருங்கால கணவனுக்கு ஏற்கனவே ஒரு பெண்ணுடன் காதல் இருந்தது என்பதை அறிந்து தங்கமயில் அதிர்ச்சி அடைந்தாலும் அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் சரவணன் இடம் சாதாரணமாக பேசுகிறார்.



இதையடுத்து தங்க மயிலை வீட்டில் விட்டுவிட்டு கடைக்கு வரும் சரவணன் அவரது மாமாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது தனது தந்தையை குமரவேல் அடித்து விட்டது அறிந்து ஆத்திரமடைகிறார்

அதுமட்டுமின்றி தனது தம்பிகள் குமரவேலை அடிக்கத்தான் கிளம்பி இருக்கிறார்கள் என்பதை அறிந்ததும் அவர்களை சந்திப்பதற்காக செல்லும் காட்சிகள் உள்ளன. மேலும் நாளைய எபிசோட் காட்சியில் குமரவேலை சரவணன் அடித்து துவைக்கும் அடிதடி காட்சிகள் உள்ளதை பார்க்கும்போது நாளை பரபரப்பான காட்சிகள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

Advertisement