• Oct 22 2024

"எங்களின் பயணம் ஓரளவு நிறைவுக்கு வந்துள்ளது" - இயக்குனர் சுதா கொங்கராவின் எக்ஸ் தள பதிவு.

Thisnugan / 3 months ago

Advertisement

Listen News!

கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியான சூர்யாவின் "சூரரை போற்று" திரைப்படத்தின் மூலமாக தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களை வென்றவர் இயக்குனர் சுதா கொங்கரா.கேப்டன் கோபிநாத்தின் கதையை எங்கும் தொய்வில்லாத திரைக்கதையாக உருவாக்கி கொடுத்திருந்தார் இயக்குனர்.


தொடர்ந்து "சூரரை போற்று" திரைப்படத்தின் ஹிந்தி ரீமேக்கினை சூர்யாவே தயாரிக்க  பிரபல நடிகர் அக்ஷய் குமார் நடிக்க ஹிந்தியிலும் சுதா கொங்கராவே இயக்கியுள்ளார்."சர்ஃபிரா" என தலைப்பிடப்பிடிருக்கும் இப் படமானது வருகிற 12 ஆம் திகதி திரைக்கு வருகிறது.


இது குறித்தான பதிவொன்றை தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள சுதா கொங்கரா அன்றும் இன்றும் என புகைப்படங்களை பகிர்ந்ததோடு "எங்களின் பயணம் ஓரளவு நிறைவுக்கு வந்துள்ளது கேப்டன் கோபிநாத் விமான உலகில் நம்மை எங்கும் அழைத்துச் சென்றார்! "என பதிவிட்டிருக்கிறார்.சுதா கொங்கராவின் இந்த பதிவானது தற்போது வைரலாகி வருகிறது.




Advertisement