• Jun 01 2024

"மனைவிக்கு மட்டும் தான் தெரியும்" – உண்மைகளை கூறிய சிவகார்த்திகேயன்…!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் வெளியான டான் ரசிகர்களால் கொண்டாடப்படும் மாபெரும் வெற்றி பெற்றுள்ளது.அடுத்ததாக பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் உருவாகி வரும் புதிய படத்தில் நடித்து வருகின்றார்.

எனினும் இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன் என் பிரச்சனை எல்லாம் மனைவிக்கு மட்டும் தான் தெரியுமென வெளிப்படையாக கூறியுள்ளார்.நடிகர் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் அனைத்தும் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்று வசூலை குவித்து வருகின்றது கோலமாவு கோகிலா வெற்றியை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

மேலும் இப் சிவகார்த்திகேயன் திரைப்படங்கள் என்றாலே சிவகார்த்திகேயனின் வழக்கமான காமெடிகள் அதிகமாகவே இருக்கும்.ஆனால் டாக்டர் படத்தில் அந்த மாதிரி காட்சிகள் எதுவும் இல்லாமல் சிவகார்த்திகேயன் படம் முழுவதும் அமைதியான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார் இது ரசிகர்களுக்கு மிகவும் புதுமையான அனுபவத்தை கொடுத்தது.

டாக்டர் மிகப்பெரிய வெற்றி பெற்றதை தொடர்ந்து அட்லியின் உதவியாளர் சிபிச்சக்கரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் முழுக்க முழுக்க கல்லூரி கதை களத்தில் உருவாகி வந்த திரைப்படம் டான் கலகலப்பான கல்லூரி வாழ்க்கை மற்றும் தந்தைக்கு மகனுமான பாசத்தையும் மிகவும் அழுத்தமான கூறியிருந்த இந்த படம் சமீபத்தில் திரையரங்குகளில் வெளியாகி வசூலில் அள்ளி குவிக்கின்றது.

அடுத்ததாக சிவகார்த்திகேயன் பிரபல தெலுங்கு இயக்குநர் அனுதீப் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் .மேலும் இந்த படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் உருவாகி வருகினுன்றது. தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் சிவகார்த்திகேயனுக்கு மிகப்பெரிய வரவேற்பு இருப்பதால் இந்த படத்திற்கு தெலுங்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது

எனினும் இந்த நிலையில் தனியார் யூடியூப் சேனல் ஒன்று நேர்காணலில் பேசிய சிவகார்த்திகேயன் தன்னுடைய ஒவ்வொரு படம் வெளியாகும்போதும் எவ்வளவு பிரச்சனை இருக்கிறது என என் அம்மாவுக்கு கூட தெரியாது என் மனைவிக்கு மட்டும் தான் தெரியும் அவரிடம் மட்டும் தான் கூறுவேன்.

மேலும் அது தவிர எனக்கு நெருங்கிய நண்பர்கள் சில பேருக்கு மட்டும்தான் தெரியும். இப் படம் வெளியாகும் அந்த நாள் இரவு வரை எனக்கு பிரச்சனை வந்து கொண்டே இருக்குமென தனியார் யூடியூப் சேனல் ஒன்றின் நேர்காணலில் சிவகார்த்திகேயன் வெளிப்படையாக இந்த தகவலை பகிர்ந்துள்ளார்.

https://www.youtube.com/embed/ODDPlX3HEf4

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement