• Dec 05 2023

எது சரி, தவறு என்பது கடவுளுக்கு தான் தெரியும்- சிவகார்த்திகேயன் குறித்து மீண்டும் மனம் திறந்த டி. இமான்

stella / 1 month ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சிவகார்த்திகேயன். இன்று நடிகர்கள் ரஜினி, கமல், விஜய், அஜித் ஆகியோரின் படங்களுக்கு பின் அதிகளவில் வசூலை தரும் நடிகராகவும் உருவெடுத்து வருகிறார். திரையுலகில் இவரது வளர்ச்சி அசாத்தியமானது. அதற்கு அவரின் கடின உழைப்பும் முக்கியம்.

இவரது நடிப்பில் அடுத்ததாக அயலான் திரைப்படம் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் சிவகார்த்திகேயன் எனக்கு துரோகம் செய்துவிட்டார் என இசையமைப்பாளர் டி.இமான் அண்மையில் குற்றம் சாட்டியிருந்தார்.


சிவகார்த்திகேயன் கூட இனி இணைய வாய்ப்பே இல்லை. இந்த ஜென்மத்தில் அது நடக்காது. அவர் எனக்கு செய்த மிகப்பெரிய துரோகம் தான் காரணம். அது என்னவென்று என்னால் வெளியே சொல்ல முடியாது. அது தனிப்பட்ட விஷயம்.

ஒருவேளை அடுத்த ஜென்மத்தில் அவர் நடிகராகவும், நான் இசையமைப்பாளராகவும் பிறந்தால் இணைய வாய்ப்பு உள்ளது. இது நான் மிகவும் கவனமாக எடுத்த முடிவு. அவர் செய்த துரோகம் எனக்கு தாமதமாகத்தான் தெரிந்தது. இதுபற்றி அவரிடம் நேரடியாகவே கேட்டுவிட்டேன். அவர் கூறிய பதிலை என்னால் சொல்ல முடியாது”.இவ்வாறு டி.இமான் கூறியுள்ளார்.

சிவகார்த்திகேயன் மீது இமான் கூறிய இந்த குற்றச்சாட்டு திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த விவகாரம் சமூகவலைதளத்தில் டிரெண்ட் ஆனது.இமான் கொடுத்த பேட்டி மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது. அவர் எனக்கு மிகப்பெரிய துரோகத்தை செய்துவிட்டார், அதை வெளியில் சொன்னால் குழந்தைகள் எதிர்காலம் பாதிக்கும் என இமான் கூறி இருந்தார்.


இதனால் பல விதமான பேச்சுகள் இணையத்தில் வந்த நிலையில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் டேமேஜ் ஆனது.இந்நிலையில் ஒரு படத்திற்காக இமான் பேட்டி கொடுத்தபோது இந்த சர்ச்சை பற்றி செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.

"இறைவன் பார்த்துக்கொள்வார். எது சரி, தவறு என்பது மனிதர்களை தாண்டி இறைவனுக்கு தெரியும். அவர் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைப்பார்" என இமான் கூறி இருக்கிறார்.இவரின் பேட்டி வைரலாகி வருவதைக் காணலாம். 


Advertisement

Advertisement

Advertisement