• May 09 2024

ஜவான் திரைப்படத்தின் வசூல் குறித்து வெளியாகிய அதிகாரப்பூர்வ தகவல்- இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா?

stella / 7 months ago

Advertisement

Listen News!


இயக்குநர் அவதாரம் எடுத்து சில படங்கள் தான் கொடுத்துள்ளார் அட்லி, அதற்குள் பாலிவூட்டில் படம் இயக்கும் வாய்ப்பு கிடைத்து அதனை வெற்றிகரமாகவும் செய்து முடித்துள்ளார்.ஷாருக்கானை வைத்து அட்லி இயக்கிய ஜவான் திரைப்படம் வெற்றிகரமாக வெளியாகி நல்ல வசூல் வேட்டையும் நடத்தி வருகிறது.

படத்தில் ஷாருக்கை தாண்டி நயன்தாரா, விஜய் சேதுபதி, ப்ரியாமணி என பலர் நடித்துள்ளார்கள்.படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாருக்கான் நீண்ட நாள் கழித்து இப்படியொரு மாஸ் கதாபாத்திரத்தில் நடித்திருப்பது அருமையாக இருப்பதாகவும், படமும் விறுவிறுப்பாக இருப்பதாகவும் விமர்சனங்கள் கொடுத்து வருகிறார்கள்.


ஷாருக்கானின் ஜவான் திரைப்படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வார நாட்களில் அதிரடியாக சரிவை சந்தித்து வந்த நிலையில், மீண்டும் அதன் வசூல் அதிகரித்து இருப்பதாக ரெட் சில்லீஸ் நிறுவனம் தற்போது பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டுள்ளது. 6 நாட்களில் ஜவான் திரைப்படம் 600 கோடி ரூபாய் வசூல் ஈட்டிய நிலையில், வார நாட்களில் அதன் வசூல் படிப்படியாக குறைய தொடங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இரண்டாவது வாரத்தின் முடிவிலேயே ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் 800 கோடிக்கும் மேல் வசூல் ஈட்டும் என்றும் ஆயிரம் கோடி ரூபாயை அசால்ட்டாக தாண்டுவது உறுதி என ஷாருக்கான் ரசிகர்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் ஜவான் திரைப்படத்தின் ஹாஷ்டேக்குகளை போட்டு ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.


ஷாருக்கானுக்கு ஜோடியாக இந்த படத்தில் நயன்தாரா நடித்துள்ளார். நடிகர் விஜய் சேதுபதி தமிழ் சினிமா ஹீரோக்களுக்கு வில்லனாக நடித்து வந்த நிலையில், இந்தப் படத்தின் மூலம் கிங் கானுக்கு வில்லனாக மாறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement