• May 06 2024

இப்போ இதைப் பார்க்க முட்டைகோஸ் மாதிரி இருக்கு- அந்த இடத்தில் டாட்டூ போட்டதால் புலம்பித் தள்ளும் ஸ்ருதிஹாசன்

stella / 9 months ago

Advertisement

Listen News!


உலகநாயகன் கமல்ஹாசனின் மகளும், பிரபல நடிகையுமான நடிகை ஸ்ருதிஹாசன் தமிழ் மொழிப்படங்கள் மட்டுமல்லாது தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிப்படங்களிலும் பிசியாக இருந்து வருகிறார். தமிழில் இவரது படங்கள் வரவில்லையென்றாலும் மற்ற மொழிகளில் இவரது படங்கள் வெளியாகிக்கொண்டு இருக்கிறது. 

இவரது நடிப்பில் இந்த ஆண்டு'வீர சிம்மா ரெட்டி','வால்டர் வீரைய்யா போன்ற படங்கள் வெளியாகியிருந்தது. இதனை அடுத்து தற்பொழுது இவர் கேஜிஎஃப்' புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ் நடிக்கும் 'சலார்' படத்தில்  கதாநாயகியாக நடித்து வருகின்றார்.


நடிகை ஸ்ருதிஹாசன் எவ்வளவுதான் படங்களில் பிசியாக இருந்தாலும் சமூக வலைத்தளங்களிலும் படு ஆக்டிவாக இருந்து வருகிறார். அடிக்கடி தனது வொர்க்அவுட் வீடியோ போன்ற அன்றாட பல வேலைகளை சமூக வலைத்தளத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் அப்டேட் செய்து வருகிறார். 

மேலும் இவர் தனது உடம்ப முழுவதும் பல இடங்களில் டாட்டூ போட்டு இருக்கிறார். அவர் கை மணிக்கட்டில் முதலில் ஒரு டாட்டூ போட்டிருந்தாராம். ஆனால் அந்த குறியீடு போடக்கூடாது என யாரோ சொல்ல உடனே அதை மறைத்து ஒரு ரோஸ் டாட்டூ போட்டுக்கொண்டாராம்.


ஆனால் அந்த சின்ன ரோஸ் பார்க்க காக்காவின் எச்சம் போல தெரிந்தது, அதனால் அதை மறைக்க இன்னும் பெரிதாக ஒரு ரோஸ் டாட்டூ போட்டுக்கொண்டேன்."எனக்கு ரோஸ் அந்த அளவுக்கு பிடிக்கும், ஆனால் இந்த டாட்டூ பார்க்க முட்டை கோஸ் போல தற்போது இருக்கிறது" என புலம்பி இருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement

Advertisement