• May 04 2024

அவரைப் பற்றி சொல்ல வார்த்தைகளே இல்லை, டிடியை அன்பாய் கட்டிப்பிடித்த விஜய்- வைரலாகும் வீடியோ

stella / 6 months ago

Advertisement

Listen News!

நடிகர் விஜய் நடிப்பில் கடந்த மாதம் திரைக்கு வந்த திரைப்படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கிய இப்படத்தில் விஜய்யுடன் திரிஷா, மிஷ்கின், சாண்டி, கவுதம் மேனன், பிரியா ஆனந்த், மடோனா செபாஸ்டியன், பிக்பாஸ் ஜனனி, மலையாள நடிகர் மேத்யூ தாமஸ், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத், ஆக்‌ஷன் கிங் அர்ஜுன், நடிகர் மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.

ஷூட்டிங் தொடங்கும் முன்பே ரிலீஸ் தேதியை அறிவித்துவிட்டு, சொன்ன தேதியில் படத்தை ரிலீஸ் செய்து கோலிவுட்டையே வியப்பில் ஆழ்த்தியது லியோ படக்குழு. இப்படம் வெளியாகி உலகளவில் பல்வேறு இடங்களில் வசூல் சாதனையை நிகழ்த்தி வருகிறது.


 குறிப்பாக இதன் வசூல் குறித்து பல்வேறு குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், இப்படம் 10 நாளில் ரூ.540 கோடி வசூலித்ததாக படக்குழுவே அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.அத்தோடு கடந்த முதலாம் தேதி இப்படத்தின் வெற்றி விழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.

இங்கே நடிகர் விஜய் பேசிய வசனங்கள் எல்லாம் மிகவும் ட்ரெண்டானது.இந்த நிலையில் இந்த வெற்றி விழாவில் தொகுப்பாளராக இருந்த டிடி மற்றும் விஜய்யை மேடைக்கு வந்த விஜய் கட்டிப்பிடித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இது குறித் வீடியோவை டிடி தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருவதைக் காணலாம்.



Advertisement

Advertisement

Advertisement