• Jan 19 2025

வருண் தேஜ் மற்றும் லாவண்யா தம்பதியினரின் திருமணப் புகைப்படங்கள் தொகுப்பு இதோ

stella / 1 year ago

Advertisement

Listen News!


மெகா ஸ்டார் சிரஞ்சீவியின் தம்பியும் நடிகருமான நாகேந்திர பாபுவின் மகன் தான் வருண் தேஜ். இவர் தற்போது தெலுங்கு படங்களில் பிஸியான நடித்து வருகின்றார். இவருக்கும் நடிகை லாவண்யா திருப்பதிக்கும் இத்தாலியில் கோலாகலமாக திருமணம் நடைபெற்று இருக்கின்றது. 


இவர்கள் திருமணத்தில் மெகா ஸ்டார் சிரஞ்சீவி, ராம் சரண், அல்லு அர்ஜுன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.இந்நிலையில் வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் இரு படங்களில் இணைந்து நடித்தனர். ஒன்றாக பார்ட்டி மற்றும் நிகழ்ச்சிகளில் இருவரும் கலந்துகொண்டார்கள்.


 இதைத்தொடர்ந்து வருண் தேஜ் மற்றும் லாவண்யா இருவரும் காதலிப்பதாக செய்திகள் வெளியாகின.இவர்களின் நிச்சயதார்த்தம் ஹைதராபாத்தில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றது. இதையடுத்து தற்போது இத்தாலியில் இவர்களின் திருமணம் குடும்பங்கள் மற்றும் நண்பர்கள் சூழ கோலாகலமாக நடைபெற்றது.


இவ்விழாவில் சிரஞ்சீவி, பவன் கல்யாண், ராம் சரண், அல்லு அர்ஜுன், அல்லு சிரிஷ் ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். இவர்கள் திருமண புகைப்படங்கள் வெளியாகி  ரசிகர்களைக் கவர்ந்து வருவதைக் காணலாம்.


Advertisement

Advertisement